அதிரடியில் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட். ஆனாலும் சகட்டு மேனிக்கு திட்டும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4-ஆம் தேதி இன்று துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

INDvsSL cup

- Advertisement -

இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரகானே மற்றும் புஜாரா ஆகியோரது இடத்திற்கு விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் காரணமாக சுப்மன் கில்க்கு இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய ரோகித் சர்மா மற்றும் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டாக ரோஹித் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மூன்றாவது வீரராக விகாரி களத்துக்கு வந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 80 ஆக இருந்தபோது அகர்வால் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஏமாற்றினார். அவரை தொடர்ந்து விஹாரியும் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியானது 175 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

pant 2

அப்போது அணியை சரிவில் இருந்து மீட்க ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 53 ரன்களை குவித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை தனது அதிரடியால் தெறிக்க விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் 97 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் என 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இவர் அதிரடியாக விளையாடுவதைப் பார்த்த போது விரைவாக சதத்தை பூர்த்தி செய்து ஒரு பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் சதம் அடிப்பதற்கு முன்பாகவே ஆட்டமிழந்து வெளியேறியதால் அவரை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கடித்து வருகின்றனர். ஏனெனில் அயல்நாட்டு மண்ணிலும் கூட அசால்டாக சதமடிக்கும் ரிஷப் பண்ட் இதுவரை 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 100வது டெஸ்டில் 2 அசத்தல் சாதனைகளை படைத்த கோலி, ஆனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் – காரணம் இதோ

இருந்தாலும் இம்முறையோடு சேர்த்து மொத்தம் ஐந்து முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இப்படி எளிதாக சதம் அடிக்கும் வாய்ப்பு கையில் இருந்தும் அதனை ஏன் தவறவிட்டீர்கள் என்று ரசிகர்கள் செல்லமாக அவரை திட்டி வருகின்றனர். இந்த முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்துள்ளது ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement