100வது டெஸ்டில் 2 அசத்தல் சாதனைகளை படைத்த கோலி, ஆனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் – காரணம் இதோ

kohli 1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. இந்த தொடருக்காக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தனது புதிய பயணத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் சமீபத்தில் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.

விராட் கோலியின் 100வது டெஸ்ட்:
இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் (200 போட்டிகள்), ராகுல் டிராவிட் (163 போட்டிகள்), விவிஎஸ் லக்ஷ்மன் (134 போட்டிகள்), அனில் கும்ப்ளே (132 போட்டிகள்), கபில் தேவ் (131 போட்டிகள்) சுனில் கவாஸ்கர் (125 போட்டிகள்), திலிப் வெங்சர்க்கார்(116 போட்டிகள்), சௌரவ் கங்குலி (113 போட்டிகள்), இசாந்த் சர்மா (105 போட்டிகள்), ஹர்பஜன்சிங் (103 போட்டிகள்) வீரேந்திர சேவாக் (103 போட்டிகள்) ஆகிய 11 இந்திய வீரர்கள் ஏற்கனவே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள்.

Kohli-1

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த அவர் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ரன் மெஷினாக பல ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி தற்போது இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார். அதேபோல 2014 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் 40 வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்துள்ள அவரை இந்த போட்டிக்கு முன்பாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவ படுத்தினார்.

- Advertisement -

8000 ரன்கள் அடித்த கிங் கோலி:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 29 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 33 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதை அடுத்து களமிறங்கிய ஹனுமா விஹாரி உடன் தனது 100வது போட்டியில் விளையாடும் விராட் கோலி களமிறங்கினார்.

virat kohli

ரசிகர்களின் பலத்த கரகோசம் மற்றும் ஆரவாரத்திற்கிடையே விளையாடிய அவர் ஆரம்பம் முதலே பவுண்டரிகளை அடிக்க துவவங்கினார். குறிப்பாக 38 ரன்களை அவர் கடந்த போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை குவித்த 6வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சூப்பர் சாதனையை படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் (15921 ரன்கள்), ராகுல் டிராவிட் (13265 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (10122 ரன்கள்), விவிஎஸ் லக்ஷ்மன் (8781 ரன்கள்), வீரேந்திர சேவாக் (8503 ரன்கள்) ஆகியோர் 8000 ரன்களை ஏற்கனவே கடந்துள்ளார்கள்.

- Advertisement -

மேலும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் அதிக ரன்கள் குவித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. ராகுல் டிராவிட் : 8553 ரன்கள்
2. விரேந்தர் சேவாக் : 8487 ரன்கள்
3. சுனில் கவாஸ்கர் : 8479
4. சச்சின் டெண்டுல்கர்: 8405
5. விராட் கோலி : 8007* ரன்கள்

virat_kohli

ரசிகர்கள் ஏமாற்றம்:
அந்த வேளையில் அவர் மிகச் சிறப்பாக விளையாடியதை பார்த்த ரசிகர்கள் இன்று கண்டிப்பாக சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென
76 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் எடுத்திருந்த போது யாரும் எதிர்பாரா வண்ணம் போல்டானார். இதனால் 100வது டெஸ்டில் சதம் அடிக்கும் முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் தவற விட்டார்.

இதையும் படிங்க : வீடியோ : அதிரடி மன்னன் கைரன் பொல்லார்ட் ஸ்பின் பவுலிங் போட்டு பாத்து இருக்கீங்களா? – வேணுனா பாருங்க

அத்துடன் கடந்த 2019க்கு பின் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் இந்த போட்டியிலாவது சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. அவருடன் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான இந்த போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவெளியின் போது இந்தியா 199/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Advertisement