வீடியோ : அதிரடி மன்னன் கைரன் பொல்லார்ட் ஸ்பின் பவுலிங் போட்டு பாத்து இருக்கீங்களா? – வேணுனா பாருங்க

Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான கைரன் பொல்லார்டு பற்றி கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் அறிந்ததே. அவர் எவ்வளவு பெரிய பவர்ஹிட்டர் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் அவர் ஸ்பின் பவுலிங் வீசுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதை நம்பித்தான் ஆகவேண்டும். தற்போது ட்ரினிடாடில் நடைபெற்று வரும் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவர் ஸ்பின் பவுலிங் வீசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறந்த ஒரு அதிரடி ஆட்டக்காரராக விளங்கி வரும் பொல்லார்டு பகுதி நேர பந்து வீச்சாளராக அதுவும் மித வேகப்பந்து வீச்சு செய்யும் வீரராக இருந்து வருவதை நாம் பார்த்துள்ளோம். பேட்டிங்கில் அதிரடியான சிக்சர்களை அடிப்பது மட்டுமின்றி தனது மித வேகப்பந்து வீச்சால் அணிக்கு தேவையான போது பந்து வீசி விக்கெட்டுகளையும் எடுக்கக்கூடிய திறமை கொண்டவர்.

- Advertisement -

இதன்காரணமாக உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வருகிறார். இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் வீரராக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.

அதன்படி தற்போது நடைபெற்றுவரும் டி10 சீசனில் பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் தற்போது அவர் ஒரு குறிப்பிட்ட லீக் போட்டியின் போது ஆப் ஸ்பின் பவுலிங் வீசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை ரசிகர்கள் பெருமளவு பகிர்ந்தும் வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஸ்பின் பவுலிங் வீசி விக்கெட்டையும் வீழ்த்தியது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவு வியக்க வைத்து வருகிறது. மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக தொடர்ந்து மும்பை அணியில் நீடித்து வருகிறார்.

இதையும் படிங்க : என்னுடைய இந்த சாதனையை அவங்க செய்யனும் அதுவே என் ஆசை – 100 ஆவது போட்டிக்கு முன் கோலி பேட்டி

இந்நிலையில் தற்போது அவர் ஸ்பின் பவுலிங் வீடியோவை மும்பை ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான கைரன் பொல்லார்டு 178 போட்டிகளில் விளையாடி 3268 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement