இன்னும் 156 ரன்தான் தேவை.. கங்குலியின் மகத்தான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Ganguly-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஹைதராபாத் சென்றடைந்த வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இம்முறையும் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி நடையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அதிரடியான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் இந்த தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் மகத்தான சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா இன்னும் 156 ரன்களை எடுத்து விட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இருக்கும் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து விடுவார். கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் 18575 ரன்கள் எடுத்துள்ள வேளையில் தற்போது ரோகித் சர்மா 18,420 ரன்களில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இப்போ கூட ரெடியா இருக்கேன்.. சச்சின், டிராவிட், கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த புஜாரா

எனவே எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 156 ரன்கள் எடுத்து விட்டால் கங்குலியை பின்னுக்கு தள்ளி முன்னேற்றம் காண்பார். இந்த பட்டியலில் 34357 ரன்களுடன் சச்சின் முதலிடத்திலும், 26733 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement