இப்போ கூட ரெடியா இருக்கேன்.. சச்சின், டிராவிட், கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 19ஆம் தேதி துவங்கிய 55வது லீக் போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகள் மோதின. விசிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் என்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்ட்ரா முதல் இன்னிங்ஸ் 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 67, நட்சத்திர அனுபவ வீரர் செட்டேஸ்வர் புஜாரா 43 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய விதர்பா சார்பில் அதிகபட்சமாக இந்தியாவுக்காக கடந்த காலங்களில் மற்றொரு நட்சத்திர வீரர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய விதர்பா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சௌராஷ்ட்ராவின் தரமான பந்து வீச்சில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ரெடியா இருக்கேன்:அந்த பட்டியல்:
1. சுனில் கவாஸ்கர் : 25834
2. சச்சின் டெண்டுல்கர் : 25396
3. ராகுல் ட்ராவிட் : 23794
4. செட்டேஸ்வர் புஜாரா : 20013*
5. விவிஎஸ் லக்ஷ்மன் : 19730

ஒரு கட்டத்தில் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க உதவிய புஜாரா 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தையும் தரத்தையும் கொண்டவர். குறிப்பாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று எதிரணி பாவலர்களுக்கு சவாலை கொடுத்து அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க: அப்படி நடந்துருக்கக் கூடாது.. இந்திய அணி விதிமுறையை மீறிட்டாங்க.. ஆப்கானிஸ்தான் வீரர் ஏமாற்றம்

இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறியதால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையுடன் கழற்றி விடப்பட்டுள்ள பிசிசிஐ இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனாலும் மனம் தளராமல் போராடும் அவர் தற்போது ரஞ்சிக் கோப்பையில் கடந்த போட்டியில் சதம்டித்து இப்போட்டியிலும் அசத்தியுள்ளார். அந்த வகையில் இப்போது சொன்னால் கூட இந்திய அணிக்காக விரைவில் துவங்கும் இங்கிலாந்து தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன் என்ற வகையில் புஜாரா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement