அப்படி நடந்துருக்கக் கூடாது.. இந்திய அணி விதிமுறையை மீறிட்டாங்க.. ஆப்கானிஸ்தான் வீரர் ஏமாற்றம்

IND vs AFG
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் அந்த அணி தங்களால் முடிந்தளவுக்கு போராடியும் முதலிடத்தில் இருக்கும் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட தோற்கடிக்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.

இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அந்த அணி பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் வெளிப்படுத்தி ஆட்டத்தை ரசிகர்களால் மறக்க முடியாது. ஏனெனில் அப்போட்டியில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த ஆப்கானிஸ்தான் 22/4 என இந்தியாவை ஆரம்பத்திலேயே பதம் பார்த்தது. இருப்பினும் ரோகித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் அடித்த உதவியுடன் தப்பிய இந்தியா 212 ரன்கள் குவித்தது.

- Advertisement -

விதிமுறையை மீறி:
ஆனால் அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் சரியாக 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் 2 அணிகளும் தலா 12 ரன்கள் எடுத்தன. அதன் காரணமாக மீண்டும் நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் ஒரு வழியாக இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோற்றது.

இந்நிலையில் அந்தப் போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் களமிறங்கி அதிரடியாக 13* ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2வது சூப்பர் ஓவரில் அடிப்படை விதிமுறைப்படி களமிறங்கியிருக்கக் கூடாது என்று ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜானத் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் தங்களுக்கு விதிமுறை தெளிவாக தெரியாததால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியாது. எங்களுடைய நிர்வாகம் நடுவர்களிடம் பேசினார்கள். ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவர் பேட்டிங் செய்வதற்கு அனுமதித்திருக்கக் கூடாது என்பது எங்களுக்கு பின்னர் தான் தெரிந்தது. ஒருவேளை நீங்கள் ரிட்டையர்ட் அவுட்டாக இருந்தாலும் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது. இருப்பினும் தற்போது எதுவும் செய்ய முடியாது”

இதையும் படிங்க: 7.2 கோடிய விட எனக்கு இதுதான் முக்கியம்.. இந்திய ஏ அணிக்காக தேர்வாகிய – குமார் குஷாக்ரா பேட்டி

“ஏனெனில் நடந்தது நடந்து விட்டது” என்று கூறினார். அதாவது எப்போதுமே சூப்பர் ஓவரில் ஒருமுறை விளையாடிய பேட்ஸ்மேன்ட்கள் அல்லது பவுலர்கள் அதே போட்டியின் மற்றொரு சூப்பர் ஓவரில் களமிறங்கக் கூடாது. ஆனால் அந்த விதிமுறையை மீறி 2வது சூப்பர் ஓவரில் களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்கள் அடித்து தங்களை தோற்கடித்ததாக கரீம் ஜானத் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement