7.2 கோடிய விட எனக்கு இதுதான் முக்கியம்.. இந்திய ஏ அணிக்காக தேர்வாகிய – குமார் குஷாக்ரா பேட்டி

Kumar
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு இளம் இந்திய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறனை வெளிப்படுத்தி தேசிய அணிக்காகவும் தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஐபிஎல் தொடரில் அசத்திய வேளையில் தற்போது இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் சில இளம் வீரர்கள் அசத்த காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக தேர்வாகிய இளம் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

அதோடு அவரது செயல்பாட்டினை தனிப்பட்ட முறையில் கவனித்த டெல்லி அணியின் முக்கிய நிர்வாகியான கங்குலி அவரிடம் இருக்கும் சில விஷயங்களை உன்னித்து பார்த்ததால் நிச்சயம் அவரை ஏலத்திற்கு முன்பாகவே டெல்லி அணிக்காக வாங்குவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது குமார் குஷாக்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம் பிடித்து விளையாட இருக்கிறார். இப்படி இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த குமார் குஷாக்ரா கூறுகையில் : இந்திய ஏ அணிக்காக விளையாடுவது என்பது சிறப்பு வாய்ந்தது.

- Advertisement -

என்னுடைய கவனம் எப்பொழுதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது தான். ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்காக எனது ஆற்றத்தை மாற்றுவதை விட சாதாரணமாக நான் விளையாடும் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் என்னுடைய திறனை மேம்படுத்துவதில் நான் அதிக கவனித்து வருகிறேன். நான் என்னை ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு பெரிய அடி விழுந்துருக்கு.. இந்திய தொடரில் முக்கிய வீரர் விலகல்.. கெவின் பீட்டர்சன் கவலை

அதேபோன்று ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவால் நிறைந்த இடங்களில் விளையாட விரும்புகிறேன். அதற்கு ஏற்றார் போல் என்னை தகுதி படுத்திக்கொள்ளவும் விரும்புகிறேன். எனக்கு ஐபிஎல் தொடரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அதிக ஆர்வம் உண்டு என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement