இங்கிலாந்துக்கு பெரிய அடி விழுந்துருக்கு.. இந்திய தொடரில் முக்கிய வீரர் விலகல்.. கெவின் பீட்டர்சன் கவலை

kevin pieterson
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியிலிருந்து இளம் வீரர் ஹாரி ப்ரூப் விலகுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர் சொன்னதை இங்கிலாந்து வாரியம் ஏற்றுக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளது.

ஆனால் அவர் விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 2022 அண்டர்-19 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

பெரிய அடி:
குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகு முறையை அறிமுகப்படுத்தினர். அப்போது இங்கிலாந்து அணியில் அறிமுகமாகி அந்த அணுகு முறையை கையிலெடுத்த ஹரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 2022 டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வெல்வதற்கு கருப்பு குதிரையாக உதவினார்.

அதன் காரணமாக வரும் காலங்களில் இந்தியாவின் விராட் கோலியை போல ஹரி ப்ரூக் அசத்துவார் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். அந்த வகையில் இம்முறை சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி வெற்றி காணும் முனைப்புடன் களமிறங்க உள்ள இங்கிலாந்துக்கு அவர் இன்றியமையாத வீரராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் விலகியுள்ளது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அடி என்ற வகையில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டர் பக்கத்தில் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த அறிவிப்பில் ஹரி ப்ரூக் மற்றும் அவருடைய குடும்பத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று நம்புகிறேன். 2வதாக இது இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பில் மிகப்பெரிய அடியை ஏற்படுத்தக் கூடியதாகும்”

இதையும் படிங்க: 2021 சென்னை டெஸ்டில் செஞ்சதை மறக்காதீங்க.. நீங்க தான் அதை பாத்துக்கணும்.. ரோஹித்துக்கு கவாஸ்கர் முக்கிய அட்வைஸ்

“ஏனெனில் மெக்கலத்தின் தலைமையில் ஹரி ப்ரூக் முற்றிலும் சிறந்த நட்சத்திரமாக செயல்படுகிறார்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்திய தொடரிலிருந்து விலகிய ஹரி ப்ரூக்கிற்கு பதிலாக மற்றொரு வீரர் டான் லாரன்ஸ் விளையாடுவார் என்று இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement