2021 சென்னை டெஸ்டில் செஞ்சதை மறக்காதீங்க.. நீங்க தான் அதை பாத்துக்கணும்.. ரோஹித்துக்கு கவாஸ்கர் முக்கிய அட்வைஸ்

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக பேட்டிங் செய்யும் யுக்தியை கடைபிடித்து எதிரணிகளை அடித்து நொறுக்கி வரும் இங்கிலாந்து வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இருப்பினும் கடந்த 12 வருடங்களாக தங்களுடைய சொந்த ஊரில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தக்க வைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரவிச்சந்திரன், அஸ்வின் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:
அதே சமயம் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்களும் திணறுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் சுழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தனர்.

எனவே இம்முறை சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் நீங்கள் தான் ஆரம்பத்திலே அதிரடியாக விளையாடி மிடில் ஆர்டர்களின் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக 2021 டெஸ்ட் தொடரில் இதே இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சவாலான பிட்ச்சில் அதிரடியான சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் இம்முறையும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று ரோகித்தை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடி சதமடித்த விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக அப்போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அவர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பித்தார். ஒருவேளை இந்த தொடரிலும் அவர் அதே வழியில் தொடர்ந்து பேட்டிங் செய்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு நல்ல துவக்கம் கிடைக்கும். மேலும் அது 3, 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கும்”

இதையும் படிங்க: அப்படி சொன்னதை வாபஸ் வாங்கிக்குறேன்.. மறுபடியும் விராட் கோலி அந்த இடத்துக்கு வந்துட்டாரு.. ஆகாஷ் சோப்ரா

“இம்முறை முதல் போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்குமா என்பதை கேப்டனாக அவர் பார்க்க வேண்டும். ஒருவேளை அப்போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து உணவு இடைவெளி வரை விக்கெட் எடுக்காமல் போனால் ரோகித் சர்மா தம்முடைய பவுலர்களை எப்படி மாற்றி மாற்றி அட்டாக் செய்கிறார் என்பதை ஆவலாக இருக்கும். அந்த வகையில் அத்தொடரில் நாம் அவரின் கேப்டன்ஷிப்பை பார்த்து மதிப்பிடலாம்” என்று கூறினார்.

Advertisement