அப்படி சொன்னதை வாபஸ் வாங்கிக்குறேன்.. மறுபடியும் விராட் கோலி அந்த இடத்துக்கு வந்துட்டாரு.. ஆகாஷ் சோப்ரா

aakash chopra
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே அசத்தலாக செயல்பட துவங்கி நிலையான இடத்தை பிடித்த அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்க துவங்கினார்.

குறிப்பாக ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உலகின் அனைத்து எதிரணிகளையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் இதுவரை 26000+ ரன்கள் மற்றும் 80 சதங்கள் அடித்து நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய பேஃப் 4 வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

வாபஸ் வாங்குறேன்:
இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய அவரை அணியிலிருந்து நீக்குங்கள் என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த காலகட்டத்தில் விராட் கோலி ஃபேப் 4 வீரர்கள் பட்டியலில் இருந்து கீழே வந்து விட்டதாக தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த இடத்திற்கு பாகிஸ்தானின் பாபர் அசாம் போட்டியிடுவதாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது தென்னாபிரிக்க தொடரில் அசத்தியது உட்பட முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி மீண்டும் எதிரணிகளை சிதறடித்து வருகிறார். அதனால் ஃபேப் 4 வீரர்கள் பட்டியலில் மீண்டும் விராட் கோலி வந்துள்ளதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா ஏற்கனவே தாம் தெரிவித்த கருத்தை வாபஸ் வாங்குகிறேன் என்ற வகையில் பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு உண்மையாக ஃபேப் 4 வீரர்களில் ஒருவராக விராட் கோலி இல்லை என்று நான் கூறியிருந்தேன். இருப்பினும் தற்போது அவர் அந்த வழிக்கு வந்துள்ளார். அந்த காலகட்டங்களில் 2 வருடங்களில் அவர் ரன் அடிக்காமல் இருந்தது மட்டுமே குறையாகும். ஆனால் தற்போது அவர் மீண்டும் வந்துள்ளார்”

இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை 2024 : 245* ரன்ஸ்.. தனி ஒருவனாக கெத்து காட்டிய ஜெகதீசன்.. ரயில்வேஸை தெறிக்கவிட்ட தமிழ்நாடு வெற்றி

“தற்போது ஸ்டீவ் ஸ்மித் அதிலிருந்து வெளியே செல்லும் அளவுக்கு தடுமாறி வருகிறார். கேன் வில்லியம்சன் 50 – 50 என்ற நிலைமையில் இருக்கிறார். விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுத்த கதை அதிக அழகாக அமைந்தது. ஏனெனில் ஒரு கட்டத்தில் அனைத்தும் முடிந்தது என்பது போல் தெரிந்தது. ஆனால் பின்னர் உலகக் கோப்பையில் விளையாடி தொடர்நாயகன் விருது வென்ற அவர் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை புதுப்பித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement