நாங்க 15-20 ரன் கம்மியா அடிச்சோம். ஆனா இந்த ஒரு விஷயம் தான் நாங்க ஜெயிக்க காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

rohith
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டி நேற்று ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

Rohit Sharma Ishan Kishan

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டி முழுக்க முழுக்க கடைசி வரை சென்று சிறப்பாக முடிந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தியான ஒன்று. நீண்ட நாட்களாக நாங்கள் எதிர்பார்த்து வந்த ஒரு விடயம் தற்போது இந்த போட்டியில் எங்களுக்கு நடைபெற்றுள்ளது.

அதிர்ஷ்டம் இம்முறை எங்கள் பக்கம் திரும்பியதால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை நாங்கள் இருகரம் கொண்டு ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுமே வெற்றிக்கு காரணம் என்று கூறுவேன். பேட்டிங்கில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம்.

Hardik Pandya Run Out

ஏனெனில் சிறப்பான துவக்கம் கிடைத்த பின்னர் மிடில் ஓவர்களில் ரன்கள் வரவில்லை. முதல் 10 ஓவர்களுக்கு பின்னர் குஜராத் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இருப்பினும் இறுதி நேரத்தில் டிம் டேவிட் எங்களது இன்னிங்க்ஸை அருமையாக முடித்துக் கொடுத்தார். நிச்சயம் இந்த 178 ரன்கள் என்பது ஒரு கடினமான இலக்கு என்று நினைத்து இறுதிவரை போராடினோம்.

- Advertisement -

இந்தப் போட்டியில் எங்களது பந்து வீச்சும் சிறப்பாகவே இருந்தது. இந்த மைதானத்தில் ஸ்லோவர் பந்துகளை அடிப்பது கடினமாக இருந்தது. குஜராத் அணி எங்களுக்கு மெதுவாக பந்து வீசி தான் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். அதே போன்று நாங்களும் அவர்களுக்கு எதிராக ஸ்லோ பந்துகளை வீச திட்டமிட்டோம். அந்த வகையில் இறுதியில் சிறப்பான கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம்.

இதையும் படிங்க : ஒரே ஓவரில் முரட்டு அடி ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வாரி வழங்கிய டாப் 6 பரிதாப பவுலர்கள்

கடைசி இரண்டு போட்டிகளாக டேனியல் சாம்ஸ் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது திறன் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அந்த வகையில் அவரும் இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement