யாரை டீம்ல எடுக்குறதுனு ரொம்ப குழப்பமா இருக்கு – இலங்கை தொடரின் வெற்றிக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 க்கு 0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

INDvsSL

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் 73 ரன்களுடனும், ஜடேஜா 22 ரன்களுடனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த தொடரில் கிடைத்த வெற்றி மூலம் பாசிட்டிவான நிறைய விடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

நம் அணியின் பெஞ்ச் வலிமை என்ன என்பது இந்த தொடரின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. அணியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த தொடரில் வாய்ப்புக்காக காத்திருந்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் :

- Advertisement -

எந்த இடத்தில் உங்களை அணி களமிறக்குகிறது என்பதை கணக்கில் கொண்டு கவலை கொள்ள வேண்டாம். எந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்க வேண்டும். இந்த சிறப்பான செயல்பாட்டை அப்படியே தொடர விரும்புகிறோம். மேலும் தற்போது உள்ள இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் உள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று ரோஹித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : 2013 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக மும்பை அணிக்கு தேர்வாக இந்த சம்பவம் தான் காரணம் – பும்ரா பேட்டி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தர்மசாலா நகரிலிருந்து மொஹாலி சென்றடைந்தவுடன் அடுத்ததாக டெஸ்ட் தொடரை எவ்வாறு கையாள போகிறோம் என்பதிலேயே நாங்கள் முழு கவனமுடன் இருப்போம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement