2013 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக மும்பை அணிக்கு தேர்வாக இந்த சம்பவம் தான் காரணம் – பும்ரா பேட்டி

Bumrah-1
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்திய அணியின் 3 வகையான கிரிக்கெட்டிலும் இன்றியமையாத முதன்மை பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். அகமதாபாத் நகரை சேர்ந்த இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட துவங்கினார். வித்யாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள இவர் இலங்கையின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை போல எதிரணி பேட்ஸ்மேன்களை தனது யார்கர் பந்துகளால் திணறடிக்க துவங்கினார்.

Jasprit Bumrah

- Advertisement -

அந்த இளம் வயதிலேயே அவ்வளவு திறமைகளைக் கொண்டிருந்த இவரின் பந்துகளை எளிதாக எதிர்கொள்ள பல தரமான பேட்ஸ்மேன்களும் யோசிக்க தொடங்கினர். வெளிப்படுத்திய அவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் பட்டையை கிளப்பும் பந்துவீச்சை அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இந்திய வெள்ளைப்பந்து அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2018ஆம் ஆண்டு டெஸ்ட் அணியிலும் கால்பதித்து இன்று 3 வகையான இந்திய அணியிலும் முதல் பந்து வீச்சாளராக ஜொலிக்கிறார்.

உலகத்தரம் வாய்ந்த பும்ரா:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் இதுவரை 113 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருந்துள்ளார் என புரிந்து கொள்ளலாம். சொல்லப்போனால் இவர் வந்த பிறகு இந்திய அணியின் மொத்த வேகப்பந்து வீச்சு கூட்டணியும் உலகத்தரம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

Bumrah

ரிக்கி பண்டிங்கை அசால்ட்டாக அவுட்:
இப்படிபட்ட இவர் கடந்த 2013 வாக்கிலேயே கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை 2 – 3 முறை அவுட் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் எங்கள் அணி பெங்களூருவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. அப்போது நானும் அந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வெறும் 2 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்தேன். அங்கு பச்சை நிறத்திலான பிட்ச் தான் பெரும்பாலும் இருக்கும் என்பதால் 2013 வாக்கில் பயன்படுத்தப்பட்ட வெள்ளைப் பந்து சிறப்பாக சுவிங் ஆகும். எனவே அந்த புதிய வெள்ளை பந்தில் நான் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்க்கு எதிராக பந்து வீசினேன்.

- Advertisement -

குறிப்பாக அவருக்கு எதிராக இன்ஸ்விங் பந்துகளை நிறைய வீசினேன். அப்போது அவரை குறைந்தது 2 – 3 முறை எளிதாக அவுட் செய்தேன். அதன் காரணமாக எனது பந்துவீச்சை பற்றி விவாதித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரிடம் ஏதோ ஒரு திறமை உள்ளது என்பதால் இவருக்கு வாய்ப்பு அளிப்போம் என முடிவு செய்தது” என கூறினார்.

Ricky Ponting Jasprit Bumrah

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆஸ்திரேலியாவின் மகத்தான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அப்போது பெங்களூருவில் நடந்த வலை பயிற்சியின் போது அவருக்கு எதிராக நிறைய இன்ஸ்விங் பந்துகளை வீசி நிறைய முறை அவுட் செய்த காரணத்தால் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களத்தில் இறங்கி விளையாட வாய்ப்பு கிடைத்ததாக ஜஸ்பிரித் பும்ரா தற்போது மனம் திறந்துள்ளார்.

மும்பையின் முதுகெலும்பு:
கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அந்த சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதேபோல் 2015 ஆம் ஆண்டும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் 2016ம் ஆண்டு மிகச் சிறப்பாக செயல்படத் துவங்கிய அவர் அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு தரமான பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

Bumrah

2016க்கு பின் இந்திய அணியிலும் கால்தடம் பதித்து அபாரமாக செயல்படத் துவங்கிய அவர் அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ப்ளேயிங் லெவனில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பின் ஒரு முக்கிய முதுகெலும்பு வீரராக மாறியுள்ளார். இதுவரை அந்த அணிக்காக 106 போட்டிகளில் 130 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கடந்த 2013 முதல் தற்போது வரை தொடர்ந்து அந்த அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். விரைவில் நடைபெறும் ஐபிஎல் 2022 தொடருக்காக ஏற்கனவே அவரை 12 கோடிகள் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement