IND vs RSA : நீங்க சொல்றது சரி தான். கடைசில தோல்விக்கான காரணம் இதுதான் – ஒப்புக்கொண்ட ரோஹித்

Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம் என்கிற வேளையில் இந்த போட்டியில் இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது.

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

- Advertisement -

அதன்படி நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணமே பீல்டிங் தான் என நேற்றிலிருந்து ரசிகர்கள் பலரும் இந்திய அணியை சமூக வலைதளத்தில் சாடி வருகின்றனர்.

Arshdeep-Singh

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் உதவி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதன் காரணமாகவே இந்த லோ ஸ்கோரிங் போட்டி கூட இறுதி வரை சென்றது. பேட்டிங்கில் நாங்கள் சற்று குறைவான ரன்களை எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகியோரது பார்ட்னர்ஷிப் தான் அந்த அணிக்கு மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் பல கேட்ச்களையும், பல ரன் அவுட் வாய்ப்புகளையும் தவற விட்டோம். இப்படி பீல்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டதாலேயே எங்கள் வெற்றி வாய்ப்பு தவறியது.

இதையும் படிங்க : மும்மூர்த்திகளோடு சேர்த்து நாலு பேரை காலி செய்த தென்னாப்பிரிக்க பவுலர் – எல்லாமே அங்கேயே முடிஞ்சிடுச்சி

இது போன்ற தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு இதேபோன்று நடக்காமல் இருக்க முயற்சிப்போம். மோசமான ஃபீல்டிங்கினாலேயே இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement