மும்மூர்த்திகளோடு சேர்த்து நாலு பேரை காலி செய்த தென்னாப்பிரிக்க பவுலர் – எல்லாமே அங்கேயே முடிஞ்சிடுச்சி

Lungi Ngidi 1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

INDvsRSA Cup

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தபோது இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை செட் செய்துவிட்டு தென்னாப்பிரிக்க அணியை சுருட்டலாம் என்று நினைத்தது.

Lungi Ngidi

ஆனால் இந்த போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ங்கிடி இந்திய அணியின் ரன் குவிப்பு சரிய மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள்ளே வீழ்த்தி இந்திய அணியை தடுமாற வைத்தார்.

- Advertisement -

மேலும் போட்டியின் ஏழாவது ஓவரில் விராட் கோலியையும் வீழ்த்தி அசத்தினார். இப்படி இந்திய அணியின் மும்மூர்த்திகளையும் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழக்க வைத்ததால் இந்திய அணி தடுமாற்றம் கண்டது. பின்னர் பின்வரிசையில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியாவையும் அவர் வந்த வேகத்திலேயே வீழ்த்தி மொத்தம் நான்கு வீரர்களை ஆட்டம் இழக்க செய்து இந்திய அணியின் அஸ்திவாரதே அசைத்துப் பார்த்தார்.

இதையும் படிங்க : பவுலர் தடுத்தும் அதிரடியான முடிவை கையில் எடுத்த கேப்டன் ரோஹித் – ஆனா கடைசில எல்லாம் வேஸ்ட்டா போச்சி

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய லுங்கி ங்கிடி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement