பவுலர் தடுத்தும் அதிரடியான முடிவை கையில் எடுத்த கேப்டன் ரோஹித் – ஆனா கடைசில எல்லாம் வேஸ்ட்டா போச்சி

Arshdeep-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கலாம் என்கிற நிலையில் முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்தது/ இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 68 ரன்களை குவித்தார்.

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

- Advertisement -

அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் இந்த போட்டியில் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது குறைந்த இலக்கை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்க அணியை சுருட்ட நினைத்த இந்திய அணியானது துவக்கத்திலேயே பவர்பிளேவிற்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகியோரது ஆட்டம் காரணமாக இந்திய அணி இறுதியில் தோல்வியை சந்தித்தது.

Arshdeep Singh 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் போது அர்ஷ்தீப் சிங் முதல் பந்தில் டீ காக்கை வீழ்த்தினார். அதன் பின்னர் அதே ஓவரின் மூன்றாவது பந்தில் ரைலி ரோசாவையும் வீழ்த்தினார்.

- Advertisement -

முதலில் அந்த பந்து ரோசோவின் கால் பகுதியில் பட்டாலும் அர்ஷ்தீப் சிங் பந்து ஸ்டம்பிற்கு வெளியே செல்கிறது ரிவ்யூ எடுக்க வேண்டாம் என ரோகித் சர்மாவிடம் கூறினார். ஆனால் பந்து எங்கே சரியாகப்பட்டது என்பதை தான் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடமும் ஆலோசனை செய்த ரோஹித் அதன்பிறகு ரிவியூ கேட்டு மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார்.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக்கின் தடுமாற்றத்தால் மீண்டும் தம்பியின் பக்கம் சாயும் ரசிகர்கள் – என்ன டிகே இப்படி பண்றீங்க

அவர் எதிர்பார்த்தது போலவே பந்து ஸ்டம்ப்பில் அடிக்கவே ரூசோ ஆட்டம் இழந்தது உறுதியானது. ரோஹித் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானதாக அமைந்து ஆனாலும் இறுதியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement