- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி துவங்கியது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தோல்வி உண்மையில் வருத்தமளிக்கிறது :

இந்த போட்டியில் டாஸ் வென்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 180 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 157 ரன்கள் என்கிற வலுவான முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே அடித்ததால் 19 அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி அடித்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

உண்மையில் ஆஸ்திரேலிய அணி எங்களை விட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பிடிக்க தவறிவிட்டோம். முதல் போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அதனை இங்கும் தொடர விரும்பினோம். ஆனால் இங்கு எங்களால் வெற்றியை பெறமுடியாமல் போனதில் வருத்தம்.

இதையும் படிங்க : டிராவிஸ் ஹெட் பொய் சொல்றாரு.. இப்படி சொன்னதால தான் அப்படி செஞ்சேன்.. உண்மையை உடைத்த சிராஜ்

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே ஒவ்வொரு சவாலை கொண்டது. அந்த வகையில் அடுத்த மூன்றாவது போட்டியிலும் நிச்சயம் ஒரு பெரிய சவால் இருக்கும். அதில் நிச்சயம் நாங்கள் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி பயணிப்போம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -