டிராவிஸ் ஹெட் பொய் சொல்றாரு.. இப்படி சொன்னதால தான் அப்படி செஞ்சேன்.. உண்மையை உடைத்த சிராஜ்

- Advertisement -

அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சுமாராக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் வழக்கம் போல இந்தியாவை அதிரடியாக எதிர்கொண்டு சதமடித்து 140 (141) ரன்கள் குவித்தார். அவரை இந்திய வீரர் முகமது சிராஜ் துல்லியமான பந்தில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அப்போது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திய கோபத்தில் அவரை “வெளியே செல்லுங்கள்” என்ற வகையில் முகமது சிராஜ் வழியனுப்பி வைத்தார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகள் சொல்லிக் கொண்டே ஃபெவிலியன் திரும்பினார். மறுபுறம் தங்களுடைய சொந்த ஊரில் சதமடித்த டிராவிஸ் ஹெட்டை அப்படியே அனுப்பிய சிராஜுக்கு எதிராக அடிலெய்ட் ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

- Advertisement -

ஹெட் பொய் சொன்னாரு:

அதன் பின் போட்டியின் முடிவில் “நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்” என்று தான் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்த போது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே பதிலுக்குத் தாம் அவ்வாறு செய்ததாக சிராஜ் கூறியுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் சிங் எழுப்பிய கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்கு எதிராக நான் மகிழ்ச்சியுடன் பந்து வீசினேன். ஏனெனில் அது நல்ல போட்டியாக இருந்தது”

- Advertisement -

உண்மை என்ன:

“அதே சமயம் நீங்கள் நல்ல பந்தில் அடிக்கப்பட்டால் அது இன்னும் உங்களுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். அதனாலேயே நான் அவரை அவுட்டாக்கிய பின் அப்படி கொண்டாடினேன். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நான் தொலைக்காட்சியில் எதுவும் சொல்லவில்லை”

இதையும் படிங்க: 10 விக்கெட்ஸ்.. எங்க வந்து யார்கிட்ட இரண்டரை முடித்த ஆஸி.. 2021 ஃபைனல் இந்தியா மோசமான சாதனை தோல்வி

“இருப்பினும் அவர் “நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்” என்று என்னிடம் சொன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் அவர் செய்தது தவறு” என்று கூறினார். மொத்தத்தில் இந்த விவகாரம் இத்தொடரில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போட்டியின் முடிவில் இருவரும் கை கொடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement