பிளேயர்ஸ் கிட்ட விராட் கோலி கூட அப்படி நடந்தது கிடையாது. ரோஹித் மீது ரசிகர்கள் வருத்தம் – காரணம் தெரியுமா?

Rohit-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சவுரவ் கங்குலிக்கு அடுத்து ஆக்ரோஷமான கேப்டன் என்று பெயர் எடுத்தவர். களத்தில் பேட்டிங்கில் ரன்களை வெறித்தனமாக குவிப்பதோடு கூடவே சேர்த்து தனது கேப்டன்சியிலும் ஆக்ரோஷத்தை காட்டி எதிரணியை மிரட்டியவர். ஆனாலும் அவரது தலைமையில் இந்திய அணி பெரிய தொடர்களில் வெற்றிகளை பெற முடியவில்லை என்கிற காரணத்தினால் சமீபத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார்.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

- Advertisement -

அவருக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் ரோகித் சர்மா மிகச்சிறப்பாகவே அணியை வழி நடத்தி வருகிறார். ஆனாலும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு வரை மிகச் சிறப்பாக இந்திய அணியை கையாண்ட ரோகித் சர்மா இந்த ஆசிய கோப்பை தொடரில் கேப்டன்சியில் பெரிய தடுமாற்றத்தை கண்டார். அதோடு இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே அவர் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக பதட்டமாகவே இருந்தது கண்கூடாக தெரிந்தது.

குறிப்பாக ரோகித் சர்மாவின் இந்த திணறலை கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகிய கூட ரோகித் சர்மா தற்போது சரியான உடல் மொழியுடன் இல்லை. அவர் ஏதோ டென்ஷனாக இருப்பது போல் தெரிவதாக குறிப்பிட்டனர். அந்த அளவிற்கு ரோகித் கேப்டன்சி செய்யும்போது தேவையில்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, வருத்தம் அடைவது என்று வித்தியாசமான செயல்களை வெளிப்படுத்தி வந்தார்.

Rohith

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்சை விட்டதும் அவரை நோக்கி முறைத்தது, திட்டியது என்று ரோகித் சர்மா மிகவும் மூர்க்கமாக நடந்து கொண்டார். அதே போன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஓவரில் தான் பந்து வீசும் பாணிக்கு ஏற்றவாறு அர்ஷ்தீப் சிங் பீல்டிங் செட்டப் செய்திருந்தார். ஆனால் பவுலரிடம் சென்ற ரோஹித் உன் இஷ்டத்திற்கு நீ பீல்டரை செட் செய்யாதே.

- Advertisement -

நான் செட் செய்திருக்கும் பீல்டர்களை வைத்து அப்படியே பந்து வீசு என்பது போல அவரிடம் முகத்தை கொடுத்து பேசாமல் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போனார். அந்த விடயம் அப்போதே இணையத்தில் வீடியோவாக வைரலாகியது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் தொடர்ச்சியான இது போன்ற செயல்களால் தற்போது விராட் கோலியுடன் ரோகித்தை ஒப்பிட்டு பேசி வரும் இந்திய ரசிகர்கள் பலரும் :

இதையும் படிங்க : இனிவரும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்டிற்கு பதிலா 5ஆவது இடத்தில் அவரை இறக்குங்க – ராபின் உத்தப்பா வேண்டுகோள்

விராட் கோலி ஆக்ரோஷமான கேப்டன் தான். ஆனாலும் கூட அவர் வீரர்களிடம் தனது கோபத்தை காண்பிக்க மாட்டார். சரியாகவே வீரர்களை மரியாதையுடன் வழி நடத்துவார் ஆனால் ரோகித் சர்மாவோ சக வீரர்களிடமே தேவையில்லாமல் கோபமடைவது, முகத்தை திருப்பிக் கொள்வது போன்ற பல்வேறு செயல்களை செய்கிறார். இது அணி வீரர்களை நடத்தும் சரியான வழிமுறை கிடையாது என ரசிகர்கள் அனைவரும் தங்களது அதிருப்தியை வருத்தங்களாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement