இனிவரும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்டிற்கு பதிலா 5ஆவது இடத்தில் அவரை இறக்குங்க – ராபின் உத்தப்பா வேண்டுகோள்

Robin-Uthappa
- Advertisement -

இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் “சூப்பர் 4” சுற்றின் போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அடைந்த தோல்விகளின் காரணமாக ஆசிய கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக இந்த தொடரிலிருந்தும் வெளியேறியது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Bhuvneshwar-Kumar-1

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் தற்போது நிலவி வருகின்றன.

குறிப்பாக இன்னும் நிலையான பிளேயிங் லெவன் இன்றி இந்திய அணி தவித்து வரும் வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான ராபின் உத்தப்பாவும் தனது பங்கிற்கு ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

Deepak Hooda 1

அதன்படி இந்திய அணியின் ஐந்தாவது இடத்தில் இறங்கும் வீரர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ள அவர், இது குறித்து கூறுகையில் : இந்திய அணியின் ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட்டை இறக்குவதா அல்லது தீபக் ஹூடாவை இறக்குவதா என்ற குழப்பம் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

- Advertisement -

ஆனால் என்னை பொருத்தவரை ரிஷப் பண்ட்டை விட தீபக் ஹூடா தான் சிறந்த வீரர். அதுமட்டுமின்றி தீபக் ஹூடாவால் பகுதிநேரமாக பந்து வீசவும் முடியும். எனவே ரிஷப் பண்டை காட்டிலும் தீபக் ஹூடாவிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : இந்தியா டி20 உலககோப்பைக்கு சென்றாலும் நாம நெனைக்குற அந்த விஷயம் நடக்காது – ஆர்.பி.சிங் அதிரடி கருத்து

அதேபோன்று இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கை ஒருபோதும் நீக்க கூடாது. அவர் கீப்பராக செயல்படுவது மட்டுமின்றி இந்திய அணியின் பினிஷராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே டி20 கிரிக்கெட்டில் அவர் நிச்சயம் தேவை. அவரை அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்க கூடாது என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement