
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்து 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை தெரிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் நடைபெறயிருந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
இந்தாலும் தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை நான் இந்திய அணியில் நீடிக்க விரும்புகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் மிகச் சிறப்பான பார்மில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடிவிட்டே ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார். ஆனாலும் நிர்வாகம் அவரது வயது மற்றும் பிட்னஸ்ஸை காரணத்தில் காண்பித்து அவரை வெளியேற்றவும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலககோப்பை தொடரை வெல்வதே தமது இலக்கு என்று ரோஹித் சர்மா சில விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளை பார்த்து தான் நான் வளர்ந்தேன். என்னுடைய ஆரம்ப கட்டத்தில் டி20 உலக கோப்பை தொடரோ, ஐபிஎல் தொடரோ, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரோ எதுவும் கிடையாது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வேணாம்.. இந்த தமிழக வீரரை துவக்க வீரராக இறக்குங்கள் – சீக்கா கருத்து
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை தொடர்தான் கிரிக்கெட்டின் உச்சமாக இருந்தது. எனவே அந்த ஒரு கோப்பையை வெல்லாமல் நான் ஓய்வு பெற மாட்டேன். நிச்சயம் அடுத்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து அந்த தொடரை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.