சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இன்று பிப்ரவரி 12-ஆம் தேதி தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
சஞ்சு சாம்சன் வேணாம்.. இவருக்கு வாய்ப்பு குடுங்க : ஸ்ரீகாந்த்
அந்த வகையில் பிப்ரவரி 12-ஆம் தேதியான இன்று இரவு டெல்லி நகரில் இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மருத்துவமனையில் இருந்து நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
இதன்காரணமாக உடனடியாக அவரால் இந்த இரண்டாவது போட்டியில் விளையாட முடியாது. இதன் காரணமாக அபிஷேக் ஷர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எப்போதுமே துவக்க வீரர்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரராக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தான் விளையாடி வருகிறார்.
இவ்வேளையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியது பலரது மத்தியிலும் விவாதத்தை எடுத்துள்ளது. அந்தவகையில் அவர் கூறியதாவது : ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. அவர் தற்போது பார்மில் இல்லை. எனவே அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பினை வழங்கி எந்த ஒரு பயனும் கிடையாது.
இதையும் படிங்க : ஏற்கனவே அபிஷேக் சர்மாவுக்கு காய்ச்சல்.. இதுல இஷான் கிஷனுக்கு இப்படி ஆகனுமா? – பயிற்சியில் நேர்ந்த சோகம்
அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம். அப்படி அவர் களமிறங்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஒரு போட்டியில் விளையாடிய அனுபவம் கிடைக்கும். எனவே இந்த ஒரு வாய்ப்பை சஞ்சு சாம்சனுக்கு வழங்குவதை விட வாஷிங்டன் சுந்தரை ஓப்பனிங் செய்ய களமிறக்குவது சிறந்த முடிவாக இருக்கும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.



