IND vs WI : ஒருநாள் கிரிக்கெட்டில் பிரமாண்டமான சாதனையை படைக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா (அடிப்பாரா?)

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND-vs-WI-1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது நாளை ஜூன் ஜூலை 27-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு இமாலயா சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரோகித் சர்மா இதுவரை 243 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி 30 சதங்கள் 48 அரைசதங்கள் என 9825 ரன்கள் குவித்துள்ளார்.

Rohit-Sharma

மேலும் இந்த தொடரில் அவர் இன்னும் 175 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை சர்வதேச அளவில் 14 பேர் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : 110 மீட்டர் முரட்டு சிக்சரை பறக்க விட்ட பொல்லார்ட் – அமெரிக்க தொடரில் நூலிழையில் மும்பையின் எம்ஐ தப்பியது எப்படி?

அதிலும் இந்தியா சார்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய ஐவர் மட்டுமே பத்தாயிரம் ரன்களை கடந்திருந்த வேளையில் தற்போது இந்த பட்டியலில் ரோகித் சர்மா ஆறாவது வீரராக இணைய அற்புதமான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement