தோனியின் 13 ஆண்டுகால சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit-and-Dhoni
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இவ்வேளையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தோனியின் 13 ஆண்டுகால சாதனையை சமன் செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணியானது அங்கு ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை.

- Advertisement -

இறுதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தது. அவரை தவிர்த்து வேறு எந்த ஒரு இந்திய அணியின் கேப்டனும் அங்கு டெஸ்ட் தொடரை சமன் செய்தது கிடையாது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் நான் பார்த்த 3 சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்த 3 பேர்தான் – நாதன் லயன் வெளிப்படை

இந்நிலையில் ஜனவரி 3-ஆம் தேதி துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஒருவேளை ரோகித் சர்மா வெற்றி பெற்றால் தோனிக்கு அடுத்து தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement