சர்வதேச கிரிக்கெட்டில் நான் பார்த்த 3 சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்த 3 பேர்தான் – நாதன் லயன் வெளிப்படை

Nathan-Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 29 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இப்படி ஒயிட் பால் கிரிக்கெட்டில் பெரிய அளவில் அவர் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு அனைவரையுமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

குறிப்பாக 2011-ஆம் ஆண்டு தனது கரியரை துவங்கிய நாதன் லயன் தற்போது வரை 124 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ள அவர் 505 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 58 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மெக்ராத்தின் சாதனையையும் அவர் முறியடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் அவர் விளையாடும் பட்சத்தில் அவர் ஷேன் வார்னின் சாதனையை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது. 36 வயதாகும் நாதன் லயன் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் ஜனவரி 3-ஆம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கும் டேவிட் வார்ட்னரின் கடைசி போட்டியிலும் அவர் பங்கேற்று விளையாட உள்ளார்.

இந்நிலையில் இதுவரை தான் எதிர்த்து விளையாடி வீரர்களில் சிறந்த மூன்று வீரர்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நாதன் லயன் கூறுகையில் : நான் இதுவரை விளையாடியதில் நான் பார்த்தவரையில் மூன்று வீரர்களை சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று கூறுவேன். அந்த வகையில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ஏ.பி.டிவில்லியர்ஸ் இவர்கள் மூவரும் எனக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

- Advertisement -

இவர்கள் மூன்று பேருமே மிகத் திறமையான வீரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இது போன்ற சாம்பியன் வீரர்களுக்கு எதிராக பந்து வீசும்போது நிச்சயம் சவால்கள் அனைவருக்குமே இருக்கும். நான் பார்த்தவரை இவர்கள் மூவரும் எனக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் கூறினார்.

இதையும் படிங்க : நீங்க கிங் கோலியாக முடியாது.. ஆனா வெளிநாட்டுல கொஞ்சம் ஃபெர்பார்ம் பண்ணுங்க.. விமர்சித்த ஸ்ரீகாந்த்

இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலிக்கு எதிராக பந்துவீசியுள்ள நாதன் லயன் 7 முறை அவரை ஆட்டமிழக்க வைத்துள்ளார். அதேபோன்று ஆறு முறை சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்துவீசியுள்ள அவர் 4 முறை ஆட்டமிழக்க வைத்துள்ளார். அதோடு இந்திய அணிக்கு எதிராக மட்டும் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement