நீங்க கிங் கோலியாக முடியாது.. ஆனா வெளிநாட்டுல கொஞ்சம் ஃபெர்பார்ம் பண்ணுங்க.. விமர்சித்த ஸ்ரீகாந்த்

Kris Srikkanth 3
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டது.

எனவே குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க 2வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து ஏனைய அனைத்து பேட்ஸ்மேன்களும் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

வெளிநாட்டில் அசத்துங்க:
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களையும் இந்திய அணியையும் ஏமாற்றினார். இத்தனைக்கும் 2023 காலண்டர் வருடத்தில் உலகிலேயே அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அப்படி மோசமாக அவுட்டானது ஆச்சரியமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

இருப்பினும் இந்திய மண்ணில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கும் அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக தடுமாறி வருகிறார். குறிப்பாக கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 5 இன்னிங்ஸில் 83 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 3 வருடங்களாகியும் தம்முடைய டெஸ்ட் கேரியரில் 30க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் சுப்மன் கில் அதற்கேற்றார் போல் வெளிநாடுகளில் அசத்த வேண்டுமென கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் உலகம் முழுவதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆசிய கண்டத்திற்குள் மட்டும் ரன்கள் அடிப்பது எந்த உதவியும் செய்யாது. நாம் ஏன் விராட் கோலியை கிங் என்று அழைக்கிறோம்? அவருடைய சாதனைகளை பாருங்கள்”

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்படுவாரா? ஜடேஜா குணமடைந்து விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் பதில்

“கடந்த வருடம் கூட ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் அசத்தினார். ஆம் இங்கே அனைவரும் விராட் கோலியாக முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் அவருடைய தரத்திற்கு நிகராக செயல்பட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக சுப்மன் கில் அடுத்ததாக இப்படி வருவார் அப்படி வருவார் என்று நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. இருப்பினும் நான் பாராட்டுவதற்கு முன் காத்திருந்து அவரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது அவரை நான் அதிகமாகவோ அல்லது குறைத்தோ மதிப்பிடவில்லை” என்று கூறினார்.

Advertisement