கவுதம் கம்பீரின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு – மிஸ் ஆன 4 மாசம் வெயிட் பண்ணனும்

Rohit-and-Gambhir
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றி விட்டது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் துவங்க உள்ளது. இந்த ஐந்தாவது போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் ரோகித் சர்மா முன்னாள் வீரரான கௌதம் கம்பீரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா படைக்கப் போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் 4154 ரன்களுடன் தற்போது அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் பதினாறாவது இடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 58 டெஸ்ட் போட்டிகளை விளையாடி 4035 ரன்களுடன் 17-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஐந்தாவது போட்டியில் ரோகித் சர்மா மேலும் 120 ரன்களை அடிக்கும் பட்சத்தில் கௌதம் கம்பீரின் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-ஆவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருவேளை இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவரால் 120 ரன்களை அடிக்க முடியவில்லை என்றால் அடுத்த நான்கு மாதங்கள் ரோஹித் சர்மா காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். ஏனெனில் அடுத்த நான்கு மாதங்களுக்கு ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற இருப்பதினால் இந்திய அணிக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த டெஸ்ட் போட்டியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அதை பற்றி சொல்ல வேண்டியதில்ல.. வாங்க ஒன்னா சேந்து தமிழ்நாட்டை தோற்கடிப்போம்.. ஸ்ரேயாஸ்க்கு ரகானே வரவேற்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த நடப்பு தொடரில் ஏற்கனவே ரோஹித் சர்மா 1 சதம் மற்றும் 1 அரைசதம் என ஓரளவு டீசண்டான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ள வேளையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement