அதை பற்றி சொல்ல வேண்டியதில்ல.. வாங்க ஒன்னா சேந்து தமிழ்நாட்டை தோற்கடிப்போம்.. ஸ்ரேயாஸ்க்கு ரகானே வரவேற்பு

Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் பிசிசிஐ வெளியிட்ட 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வெளிப்படையாக கேட்டுக் கொண்டும் அதை பின்பற்றாததால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் இஷான் கிசான் கடைசி வரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் டிஒய் பாட்டில் டி20 தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் லேசாக காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

ரகானே வரவேற்பு:
இருப்பினும் தமக்கு முதுகு வலி இருப்பதாக சொன்ன அவர் பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் மும்பைக்காக விளையாடாமல் போனதே தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது பிசிசிஐ வழிக்கு வந்துள்ள அவர் மார்ச் 2ஆம் தேதி பந்த்ராவில் நடைபெறும் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் மும்பை அணிக்காக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு எதிரான செமி ஃபைனலில் தம்முடைய தலைமையில் விளையாட வரும் ஸ்ரேயாஸ் இயருக்கு மும்பை அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர இந்திய வீரர் அஜிங்க்ய ரகானே வரவேற்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த ஆலோசனையும் தேவைப்படாமலேயே அசத்தக்கூடிய திறமை ஸ்ரேயாஸிடம் இருப்பதாக ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது வருமாறு. “ஸ்ரேயாஸ் அனுபவம் கொண்ட வீரர். மும்பை அணிக்காக விளையாடிய போதெல்லாம் வெற்றிகளில் அவருடைய பங்கு அபாரமானதாக இருந்தது. தற்போது செமி ஃபைனலில் எங்களுடைய அணியில் அவர் விளையாடுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். அவருக்கு உத்வேகம் அல்லது ஆலோசனை தேவைப்படும் என்று நான் கருதவில்லை”

இதையும் படிங்க: ஒருவேளை டேவான் கான்வே ஐ.பி.எல் 2024 தொடரில் இருந்து விலகினால் யார் துவக்க வீரர்? – இவருக்கு வாய்ப்பு அதிகம்

“ஏனெனில் பேட்டிங்கில் அவர் எப்போதும் மும்பையின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். எனவே அவர் உடைமாற்றும் அறையில் மற்ற வீரர்களை சுற்றி இருப்பது அணிக்கு உதவும்” என்று கூறினார். முன்னதாக சாய் கிசோர் தலைமையில் இத்தொடரில் அசத்தி வரும் தமிழ்நாடு அணி 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து போராடி செமி ஃபைனலுக்கு வந்துள்ளது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் வந்துள்ளதால் பலமடைந்துள்ள மும்பையை செமி ஃபைனலில் வீழ்த்தி ஃபைனலுக்கு தமிழ்நாடு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement