ஒருவேளை டேவான் கான்வே ஐ.பி.எல் 2024 தொடரில் இருந்து விலகினால் யார் துவக்க வீரர்? – இவருக்கு வாய்ப்பு அதிகம்

Devon-Conway
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரரான டேவான் கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரின் போது தனது விரலில் காயம் அடைந்தார். அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இன்னும் ஐபிஎல் தொடரானது துவங்க ஒரு சில வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அவரது இந்த காயம் சென்னை அணிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரராக பார்க்கப்படும் கான்வே கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய போது அந்த தொடர் முழுவதும் விளையாடி 672 ரன்களை குவித்திருந்த வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement -

எனவே அவரது இடம் சென்னை அணியின் மிக முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே விளையாடாத டேவான் கான்வே மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது.

அதன் காரணமாக டி20 உலககோப்பை தொடருக்காக அவரை முழுவதுமாக தயார் செய்யும் பணிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒருவேளை அவர்கள் கான்வேவுக்கு முழு ஓய்வளித்து அவருக்கு சிகிச்சை கொடுக்கு விரும்பும் பட்சத்தில் டேவான் கான்வே ஐபிஎல் தொடரை முற்றிலும் தவறவிடவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி கான்வே இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக யார் துவக்க வீரராக விளையாடுவார்? என்ற ஒரு குழப்பமும் ஏற்படும்.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் : டேவான் கான்வேவின் இடத்தை நிரப்ப இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒன்று : இந்திய வீரரான அஜின்க்யா ரஹானே : ஏற்கனவே ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக விளையாடிய அனுபவம் வாய்ந்த ரகானே பல ஆண்டுகால கிரிக்கெட் அனுபவம் உடையவர் என்பதனால் அவர் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டு மிடில் ஆடரில் வேறு யாராவது வெளிநாட்டு வீரரை விளையாட வைக்கலாம் என்ற ஒரு சாய்ஸ் இருக்கிறது.

இதையும் படிங்க : புஜாரா, ரகானே ஓகே.. ஆனா என்ன பண்ணாருன்னு அவரை கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

அப்படி இல்லை டேவான் கான்வே போன்றே இடதுகை வெளிநாட்டு வீரரே துவக்க வீரராக வேண்டுமெனில் மினி ஏலத்தில் வாங்கப்பட்ட அதே நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை பயன்படுத்தலாம். ஏனெனில் இளம் வீரரான இவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கான்வே போன்றே சிறப்பாக செயல்படக்கூடியவர். எனவே அவரது இடத்தை இவரால் நிச்சயம் நிரப்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement