புஜாரா, ரகானே ஓகே.. ஆனா என்ன பண்ணாருன்னு அவரை கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

Aakash Chopra 7
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2023 – 24 காலண்டரில் விளையாடும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகியோர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியும் அதைக் கேட்காததால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த புஜாரா, ரகானே, புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெறாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல அந்த பட்டியலில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த யுஸ்வேந்திர சஹால் இல்லாதது நிறைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

பட்டியலில் இல்லை:
ஏனெனில் 2016இல் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அஸ்வினை முந்தி முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார். இருப்பினும் 2019 உலகக் கோப்பைக்கு பின் தடுமாறியதால் 2021 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் 2022 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று போராடி கம்பேக் கொடுத்தார்.

ஆனால் அப்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் கம்பேக் கொடுத்ததால் 2022 டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து விளையாடிய போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த அவர் தற்போது ஒப்பந்த பட்டியலிலும் விடுவிக்கப்பட்டு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ரகானே, புஜாரா போன்ற சுமாராக செயல்படும் சீனியர் வீரர்களை கழற்றி விட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆண் சமீப காலங்களில் ஓரளவு நன்றாக செயல்பட்ட சஹாலையும் பிசிசிஐ மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து விடுவித்தது ஆச்சரியமளிப்பதாக ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஹால் பெயர் அங்கே இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமளிக்கிறது”

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் சொதப்பும்.. ரஜத் படிடாருக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்வாரு.. ஏபிடி உறுதி

“ரகானே, புஜாரா, தவான் ஆகியோர் இந்த பட்டியலில் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தீபக் ஹூடா இல்லாததையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சஹால் பெயர் அங்கே இல்லை. இது பிசிசிஐ அவரைத் தாண்டி வேறு கோணத்தில் செல்வதை காட்டுகிறதா? இது அந்த கூற்றை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான நம்பிக்கை அவர் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இந்த பட்டியலில் அவருடைய பெயர் இல்லை” என்று கூறினார்.

Advertisement