இங்கிலாந்து தொடரில் சொதப்பும்.. ரஜத் படிடாருக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்வாரு.. ஏபிடி உறுதி

Ab De Villiers 6
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளில் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்றும் பின்னர் ஹாட்ரிக் வெற்றிகளால் அபார கம்பேக் கொடுத்த இந்தியா சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக எங்களை சாய்க்க முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சர்ப்ராஸ் கான் அறிமுக போட்டியிலேயே 2 இன்னிங்ஸிலும் அரை சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அவரை மிஞ்சும் அளவுக்கு 3வது போட்டியில் துருவ் ஜுரேல் 90, 39* ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:
இருப்பினும் 2வது போட்டியில் அறிமுகமான ரஜத் படிடார் மட்டும் இதுவரை 32, 9, 5, 0, 17, 0 என சொற்ப ரன்களில் அவுட்டாகி அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். அதனால் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ள இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் அவர் நீக்கப்பட்டு தேவ்தூத் படிக்கல் அறிமுகமாக களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஏற்கனவே சிறப்பாக விளையாடி இத்தொடரை வென்று விட்டதால் ரஜத் படிடாருக்கு கேப்டன் ரோஹித் சர்மா 5வது போட்டியில் வாய்ப்பு கொடுப்பார் என்று ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரஜத் படிடார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார்”

- Advertisement -

“ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன. ஒருவேளை ரஜத் படிடாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக் குழுவினர் இவரிடம் வருங்காலம் இருப்பதாக கருதி தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்”

இதையும் படிங்க: தோனி தான் அதோட கடவுள்.. அவரால தான் இந்தியாவுக்கே எங்களை தெரியும்.. சௌரப் திவாரி

“அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. அது இளம் வீரர்களும் மோசமான தருணத்தை சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ள இந்திய அணியின் கலாச்சாரத்தை எனக்கு காண்பிக்கிறது” என்று கூறினார்.

Advertisement