தோனி தான் அதோட கடவுள்.. அவரால தான் இந்தியாவுக்கே எங்களை தெரியும்.. சௌரப் திவாரி

Saurabh Tiwari
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி இந்தியா கண்டெடுத்த மகத்தான வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ராஞ்சி போன்ற கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஊரில் பிறந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வேலையை விட்டு உள்ளூரில் விளையாடத் துவங்கிய அவர் 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து 2007இல் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்ற அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. அடுத்த வருடமே கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலகக் கோப்பையை வென்ற தோனி தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றார்.

- Advertisement -

ராஞ்சியின் கடவுள்:
அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்த தோனி மிகச்சிறந்த கேப்டன் பினிஷர், விக்கெட் கீப்பர், தற்போதுள்ள வீரர்களை வளர்த்த தலைவன் போன்ற பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். அந்த வகையில் பலருக்கும் ரோல் மாடலாக திகழும் அவரை சில ரசிகர்கள் கடவுளாகவும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட்டுக்கு தோனி தான் கடவுள் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சௌரப் திவாரி கூறியுள்ளார். மேலும் தோனி தான் ஜார்க்கண்ட் கிரிக்கெட்டை மொத்த இந்தியாவுக்கும் அடையாளப்படுத்தியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி ஜார்க்கண்ட் கிரிக்கெட்டின் கடவுள்”

- Advertisement -

“இந்தியாவுக்காக அவர் விளையாடத் தொடங்கிய பின்பு தான் மக்கள் எங்களுடைய மாநில அணி இருப்பதை தெரிந்து கொள்ளத் துவங்கினர். அதனாலேயே ஜார்க்கண்ட் எங்கே இருக்கிறது என்பதை அவர்கள் தேடி வந்தனர். அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறார். சொந்த ஊரில் இருந்தால் எங்களைப் பார்க்க வரும் அவர் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார். சில நேரங்களில் பயிற்சி எடுத்து அவர் எங்களுக்கு ஆதரவும் கொடுப்பார்”

இதையும் படிங்க: ஏற்கனவே இருக்குற பிரச்சனையில இப்போ இதுவேறயா? இதுக்கு என்ன பண்ண போறாங்களோ? – சிக்கலில் இஷான் கிஷன்

“இந்திய அணிக்காக தோனி பைய்யா கேப்டனாக இருந்த போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக நீங்கள் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவர் உங்களுக்கு ஆதரவாக நிற்பார். கேப்டன்ஷிப்பை தவிர்த்து விக்கெட் கீப்பராகவும் செயல்படும் தோனி பாய் பவுலர்களுக்கு எப்போதுமே உதவியாக இருப்பார். பிட்ச் எப்படி இருக்கிறது என்பது போன்றவற்றை பவுலர்களுக்கு சொல்லும் அவர் ஃபீல்டர்களை நிற்க வைப்பதிலும் உதவுவார்” என்று கூறினார்.

Advertisement