Facebook Instagram
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Search
Cric Tamil Logo Cric Tamil
Cric Tamil Logo Cric Tamil Logo
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Home கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil இந்திய கிரிக்கெட் ஏற்கனவே இருக்குற பிரச்சனையில இப்போ இதுவேறயா? இதுக்கு என்ன பண்ண போறாங்களோ? – சிக்கலில் இஷான்...

ஏற்கனவே இருக்குற பிரச்சனையில இப்போ இதுவேறயா? இதுக்கு என்ன பண்ண போறாங்களோ? – சிக்கலில் இஷான் கிஷன்

By
Siva
-
Mar 1, 2024, 07:32PM IST
Ishan-Kishan
- Advertisement -

25 வயதான இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் தனது இடத்தினை இழந்திருந்தார். பிசிசிஐயின் கோரிக்கையை மீறி உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மனச்சோர்வு காரணமாக இந்திய அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்காமல் இருந்த அவருக்கு சில வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது. இதனால் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை என்றாலும் இந்த நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி போட்டிகள்) பங்கேற்ற விளையாடுங்கள் என பிசிசிஐ இஷான் கிஷனிடம் கேட்டுக் கொண்டது.

- Advertisement -

மேலும் ரஞ்சி போட்டியில் விளையாடி பார்மை நிரூபித்த பின்னரே மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார்.

ஏற்கனவே பிசிசிஐ-யின் பேச்சை மதிக்காமல் இருப்பதாக கிஷன் கிஷன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கும் வேளையில் தற்போது உள்ளூர் நகர போட்டிகளில் பிசிசிஐ லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து விளையாடியதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அதாவது சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக பயன்படுத்தும் உபகரங்களை சாதாரண உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் அந்த சின்னங்களை டேப் கொண்டு அதனை மறைத்த விட்ட பின்னரே அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால் அதையும் கவனிக்காத இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யின் லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மட்டை உள்ளூர் போட்டியில் பயன்படுத்தியதால் இப்படி ஒரு விடயத்திற்காக மீண்டும் அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 5 வருடம்.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தோல்வி வரலாற்றை மாற்றி எழுதிய அயர்லாந்து.. தனித்துவ உலக சாதனை

ஆனாலும் அவர் மீது பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த விடயம் ஒருவேளை பி.சி.சி.ஐ-க்கு எட்டும் பட்சத்தில் கட்டாயம் அவருக்கு பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
  • TAGS
  • Bcci
  • Indian Team
  • Ishan Kishan
  • Local Match
  • Logo
  • இந்திய அணி
  • இஷான் கிஷன்
  • உள்ளூர் போட்டி
  • பி.சி.சி.ஐ
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Siva

    RELATED ARTICLESMORE FROM AUTHOR

    Harry Brook
    இந்திய கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிராக நாங்க செய்ஞ்ச இந்த விடயம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு – ஹாரி புரூக் பேச்சு

    Shreyas Iyer
    இந்திய கிரிக்கெட்

    அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கு காரணம் இதுதான்.. வித்தியாசமான விளக்கத்தை சொன்ன – ஷ்ரேயாஸ் ஐயர்

    Anil Kumble
    இந்திய கிரிக்கெட்

    இதுக்காகவா இங்கிலாந்து நாட்டுக்கு போனீங்க.. இந்திய அணியின் தவறை விமர்சித்த – அணில் கும்ப்ளே

    விளம்பரம்

    சமூக வலைத்தளம்

    173,445FansLike
    6,500FollowersFollow
    1,600SubscribersSubscribe

    Popular category

    • இந்திய கிரிக்கெட்23824
    • ஐ.பி.எல்10250
    • உலக கிரிக்கெட்4681
    • உலகக் கோப்பை 20231291
    • ஆசிய கோப்பை816

    விளம்பரம்

    - Advertisement -
    Logo Footer
    ABOUT US
    We provide latest cricket news in Tamil language. Read More..

    Privacy Policy

    Terms and Condition

    Our Network

    Dheivegam
    Recipes Hindi
    Contact us: [email protected]
    FOLLOW US
    Facebook Instagram
    • Ethics Policy
    • Corrections policy
    • Editorial Board Info
    • Ownership & funding information
    • Contact Us
    © crictamil.in