5 வருடம்.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தோல்வி வரலாற்றை மாற்றி எழுதிய அயர்லாந்து.. தனித்துவ உலக சாதனை

AFG vs IRE
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அயர்லாந்து கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக இவ்விரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடின. பிப்ரவரி 28ஆம் தேதி அபுதாபியில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இப்ராஹீம் ஜாட்ரான் 53, கரீம் ஜானத் 41 ரன்கள் எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 5, குர்ட்டிஸ் கேம்பர் 2, கிரைக் எங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் விளையாடிய அயர்லாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் மிகுந்த போராட்டத்திற்கு பின் 263 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

சரித்திர வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக பால் ஸ்டெர்லிங் 52, லார்கன் டுக்கெர் 46, குர்ட்டிஸ் கேம்பர் 49, ஆண்டி மெக்பிரின் 38 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜியா-உர்-ரஹ்மான் 5, நவீட் ஜாட்ரான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 108 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மீண்டும் அயர்லாந்தின் நேர்த்தியான பந்து வீச்சில் முடிந்தளவுக்கு போராடியும் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாஹிதி 55, ராமனுல்லா குர்பாஸ் 46, நூர் அலி ஜாட்ரான் 32 ரன்கள் எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெகார்த்தி, கிரைக் எங், மார்க் அடைர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 111 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு பீட்டர் மோர், குர்ட்டிஸ் கேம்பர் டக் அவுட்டாக அடுத்து வந்த ஹேரி டெக்டர் 2, பால் ஸ்டெர்லிங் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 39/4 என தடுமாறிய அந்த அணிக்கு இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி கேப்டன் ஆண்டி பால்பிரின் 58*, லர்கம் டுக்கெர் 27* ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 2019இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்று விளையாடத் துவங்கிய அந்த அணி இதற்கு முன் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வி அல்லது ட்ராவை மட்டுமே சந்தித்தது.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக மட்டும் விளையாட கசக்கும்.. ஐ.பி.எல் ன்னா இனிக்குமோ? பாண்டியா குறித்து வெளியான புள்ளி விவரம்

ஆனால் தற்போது அந்த தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதியுள்ள அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் வெற்றியை வெளிநாட்டில் பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உட்பட தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடிய உலகின் மற்ற அணிகள் தங்களின் முதல் வெற்றியை சொந்த மண்ணில் தான் பதிவு செய்தன. மறுபுறம் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீட் ஜாட்ரான் 2 விக்கெட்களை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement