இந்தியாவுக்காக மட்டும் விளையாட கசக்கும்.. ஐ.பி.எல் ன்னா இனிக்குமோ? பாண்டியா குறித்து வெளியான புள்ளி விவரம்

Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தும் அவர் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோன்று அவரது பீல்டிங் மிகச் சிறப்பான ஒன்றாக இருப்பதனால் அவர் இந்திய அணியின் ஒரு மதிப்பு மிக்க வீரராகவே இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறார். அதேபோன்று பாண்டியா தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பதோடு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

என்னதான் இப்படி மிகச் சிறப்பான திறமைகளுடன் அனைவராலும் கவனிக்கப்படும் வீரராக அவர் இருந்து வந்தாலும் பெரும்பாலும் காயங்களால் அவர் விளையாடுவது கிடையாது. அதிலும் குறிப்பாக இந்திய அணி ஐசிசி போன்ற தொடர்களில் விளையாடும் போது அவசியமான வேளைகளில் காயம் ஏற்பட்டு அவர் வெளியேறுவதால் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கும் பெரிய பின்னடைவு ஏற்படுகிறது.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அவர் காயத்தில் இருந்தாலும் மீண்டு வந்து விளையாடுகிறார். இப்படி இந்திய அணிக்காக விளையாடும்போது காயம் அடையும் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குணமடைந்து வரும் ஒரு புள்ளி விவரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான பாண்டியா இதுவரை 123 ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அந்தவகையில் ஐ.பி.எல் தொடரில் ஒட்டுமொத்த கரியரிலேயே அவர் வெறும் 11 சதவீத போட்டிகளை மட்டும் தான் விளையாடாமல் இருந்துள்ளார்.

- Advertisement -

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பொறுத்தவரை கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் அறிமுகமானதிலிருந்து மொத்தம் 156 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் பாண்டியா வெறும் 86 போட்டிகளில் மட்டும் தான் விளையாடியுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 45 சதவீத ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. அதேபோன்று பாண்டியா டி20 போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து இந்திய அணி 170 போட்டிகளில் விளையாடியுள்ளது ஆனால் அதில் அவர் 92 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதிலும் அவர் 43 சதவீத போட்டிகளை தவற விட்டுள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து ஜாம்பவான் கிரகாம் கூச்.. 34 வருட சாதனையை உடைக்கப் போகும் ஜெய்ஸ்வால்.. கிடைத்துள்ள வாய்ப்பு

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தமட்டில் ஒட்டுமொத்தமாகவே அவர் 17 சதவீத போட்டிகளில் மட்டும் தான் விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடி அவர் அதன் பின்னர் அந்த பக்கம் செல்வதே கிடையாது. இப்படி ஐபிஎல் தொடருக்காக மெனக்கெட்டு உடற்தகுதியை மேம்படுத்தும் அவர் இந்திய அணிக்காக விளையாட மட்டும் மெத்தனம் காட்டுவது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement