இங்கிலாந்து ஜாம்பவான் கிரகாம் கூச்.. 34 வருட சாதனையை உடைக்கப் போகும் ஜெய்ஸ்வால்.. கிடைத்துள்ள வாய்ப்பு

Jaiswal Gooch
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்தியா சொந்த மண்ணில் 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 4 போட்டிகளில் 655* ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் விளாசிய அவர் 2வது போட்டியில் 12 சிக்சருடன் 214* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

மாபெரும் சாதனை:
அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஒரு தொடரில் அதிக ரன்கள் (655) அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் துவங்க உள்ளது.

அந்தப் போட்டியில் இன்னும் 98 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிரகாம் கூச்’சின் 34 வருட சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய வரலாறு படைப்பார். இதற்கு முன் 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிராஹாம் கூச் 752 ரன்கள் அடித்து அந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

எனவே இன்னும் 98 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவருடைய சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய வரலாறு படைப்பார். அந்த சாதனையின் தற்போதைய பட்டியல்:
1. கிரகாம் கூச் (இங்கிலாந்து) : 752 ரன்கள், 1990
2. ஜோ ரூட் (இங்கிலாந்து) : 737 ரன்கள், 2021/22
3. யசஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) : 655* ரன்கள், 2024*
4. விராட் கோலி (இந்தியா) : 655 ரன்கள், 2016
5. மைக்கேல் வாகன் (இங்கிலாந்து) : 615 ரன்கள், 2002

இதையும் படிங்க: யாரும் பெரியவங்க கிடையாது.. தெரிஞ்சுத்தானே கையெழுத்து போட்ருப்பீங்க.. இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் பற்றி மதன் லால்

இது போக 5வது போட்டியில் இன்னும் 120 அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைப்பார். இதற்கு முன் 1971இல் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 774 ரன்கள் அடித்துள்ளதே முந்தைய சாதனையாகும்.

Advertisement