யாரும் பெரியவங்க கிடையாது.. தெரிஞ்சுத்தானே கையெழுத்து போட்ருப்பீங்க.. இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் பற்றி மதன் லால்

Madan Lal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகிய 2 முக்கிய வீரர்களை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத காரணத்தால் பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கு தனிப்பட்ட வீரர்களின் விருப்பத்தில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த முடிவு ஐபிஎல் தொடரில் பணத்துக்காக விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான ரஞ்சிக் கோப்பையை புறக்கணிக்கும் வீரர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் என்று பலர் வரவேற்பும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு உட்படுகிறோம் என்று கையெழுத்திட்ட பின்பே அனைத்து வீரர்களும் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

- Advertisement -

விதிமுறை பாருங்க:
அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐயின் அடிப்படை விதிமுறையை மீறியதாலேயே இஷான் கிசான், ஸ்ரேயாஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் மதன் லால் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஒருவேளை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுமாறு சொன்னால் அவர்கள் விளையாடியிருக்க வேண்டும். இங்கே யாரும் இந்திய கிரிக்கெட்டை விட பெரியவர் கிடையாது. முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயம் என்ற விதிமுறையை வைத்துள்ளதற்கு பிசிசிஐக்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இப்போதெல்லாம் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரால் முதல் தர கிரிக்கெட்டை புறக்கணிக்கின்றனர்”

- Advertisement -

“ஒவ்வொரு வீரரும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது பிசிசிஐ உருவாக்கிய விதிமுறையாகும். எனவே நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பிசிசிஐ இப்படி நடவடிக்கை எடுத்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டை காண்பிப்பார்கள். ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் உள்ளூரில் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் உங்களுக்கு பயனைக் கொடுக்கும். இஷான், ஸ்ரேயாஸ் ஆகியோருடைய தரத்தில் இங்கே யாருக்கும் சந்தேகம் கிடையாது”

இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் நெருங்கக்கூட முடியாது.. ஜுரேல், ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட அவர் தான் காரணம்.. இயன் சேப்பல்

“அவர்கள் சிறப்பாக செயல்பட்டதாலேயே இங்கே இருக்கின்றனர். இருப்பினும் பிசிசிஐ தங்களுடைய வீரர்கள் கட்டுக்கோப்புடன் இருப்பதை விரும்புகிறது” என்று கூறினார். மேலும் ஸ்ரேயாஸ், இஷான் கிசான் போன்ற வீரர்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் தயாராக இருப்பதை மதன் லால் பாராட்டியுள்ளார். அத்துடன் யாரையும் நம்பாமல் இப்படி மாற்று வீரர்களை வைத்திருப்பது இந்தியாவுக்கு சிறந்த வெற்றிகளை கொடுக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement