ஸ்டோக்ஸ் நெருங்கக்கூட முடியாது.. ஜுரேல், ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட அவர் தான் காரணம்.. இயன் சேப்பல்

Ian Chappell
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இங்கிலாந்து அதற்கடுத்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. அதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்து இங்கிலாந்து தலை குனிந்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் தனி ஒருவனாக 655 ரன்கள் அடித்து விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

இயன் சேப்பல் பாராட்டு:
அதே போல துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் போன்ற அறிமுகமான வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸை விட இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்

அத்துடன் ஜெய்ஸ்வால், ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் ரோகித் சர்மாவின் வழிகாட்டுதல் காரணமாகவே அசத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தில் ரோகித் சர்மாவின் தலைமை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ரோகித் சர்மா மிகவும் அமைதியாக அதே சமயம் திறமையான மற்றும் ஆக்ரோஷமான வழியில் பென் ஸ்டோக்ஸை விட வித்தியாசமான கேப்டன்”

- Advertisement -

“குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பின் அணியில் செய்த சரியான மாற்றங்கள் அவருடைய திறமையை காட்டுகிறது. 3வது போட்டியில் முக்கியமான நேரத்தில் தலைசிறந்த சதத்தை அடித்த அவர் சம்பிரதாய கேப்டன் அல்ல என்பதை காண்பித்தார். அவர் சரியான தலைமைத்துவ வெற்றியின் பரம்பரையை கொண்டுள்ளார். அது இந்திய அணியை சரியான திசையில் வழி நடத்த உதவியது. அவருடைய கேப்டன்ஷிப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருந்தால் இந்த இந்திய அணி இன்னும் கடினமான சூழ்நிலையை சந்தித்திருக்கும்”

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் கலைகட்டவுள்ள சி.எஸ்.கே அணியின் பயிற்சி முகாம்.. தோனி எப்போ வாறார் தெரியுமா? – விவரம் இதோ

“பும்ரா, ஜெய்ஸ்வால் மற்றும் சில அனுபவமற்ற இளம் வீரர்களிடம் திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அசத்துவதற்கு ரோகித் சர்மாவின் சரியான வழிகாட்டுதல் தேவைப்பட்டது. அஸ்வின் பாதியிலேயே வெளியேறிய போது குல்தீப் யாதவை அவர் சாதுரிமாக பயன்படுத்திய விதம் மாஸ்டர் ஸ்டோர்க். முதல் போட்டியில் மனசோர்வடைந்த தோல்வியை சந்தித்த பின்பும் வளைந்து கொடுக்காமல் கணக்கிட்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா கம்பேக் கொடுக்க ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் உதவியது” என்று கூறினார்.

Advertisement