சேப்பாக்கத்தில் கலைகட்டவுள்ள சி.எஸ்.கே அணியின் பயிற்சி முகாம்.. தோனி எப்போ வாறார் தெரியுமா? – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்காக தற்போது ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த 10 அணி வீரர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தயாராக காத்திருக்கின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சேப்பாக்கத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்க இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மார்ச் 22-ஆம் தேதி ஐபிஎல் தொடரானது துவங்க உள்ள வேளையில் மார்ச் 1-ஆம் தேதியான இன்று சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். மேலும் நாளை மார்ச் 2-ஆம் தேதி பயிற்சி முகாம் துவங்கும் என்றும் அதில் சென்னை அணியின் பல்வேறு நட்சத்திர வீரர்கள் பங்கேற்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சீசனுக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த பயிற்சி முகாமினை ரசிகர்கள் நேரில் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது பயிற்சி முகாமில் கலந்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அது குறித்து வெளியான தகவலின் படி : தோனி அடுத்த வாரம் சென்னை அணியுடன் இணைந்து பயிற்சி பெற இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முழங்கால் வலியுடன் விளையாடிய தோனி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அண்மையில் ராஞ்சியில் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஜோக் இல்ல.. அவர் ஆல் டைம் கிரேட் பிளேயர்.. இந்திய வீரருக்கு கங்குலி பாராட்டு

இவ்வேளையில் தற்போது மீண்டும் அவர் சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட உள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இந்த சீசனானது அவருக்கு கடைசி சீசன் என்பதனால் நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் தற்போதே வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement