இதெல்லாம் ஜோக் இல்ல.. அவர் ஆல் டைம் கிரேட் பிளேயர்.. இந்திய வீரருக்கு கங்குலி பாராட்டு

Sourav Ganguly 6
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது.

முன்னதாக இந்த தொடரின் 3வது போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். மேலும் அனில் கும்ப்ளேவை முந்தி வேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த அவர் 3000 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற மகத்தான வரலாற்றையும் படைத்தார்.

- Advertisement -

ஜோக் இல்ல:
அதைத் தொடர்ந்து 4வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்று அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை உடைத்தார். அந்த வகையில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 507* விக்கெட்கள் எடுத்துள்ள அஸ்வின் தமிழகத்தின் அடையாளமாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

மேலும் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ள 5வது போட்டியில் களமிறங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடும் 13வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற உள்ளார். இந்நிலையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுப்பது ஜோக் அல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகியோரால் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் ஆல் டைம் கிரேட். எந்த காலத்திலும் அவர் சிறப்பான வீரர். 500 விக்கெட்டுகள் எடுப்பது ஜோக் அல்ல. ரவீந்திர ஜடேஜா தற்சமயத்தில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அவர் இந்திய சூழ்நிலைகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் அசத்தக்கூடியவர்”

இதையும் படிங்க: சர்பராஸ் கான் அதுக்கு செட்டாக மாட்டாரு.. வருவதை மட்டும் செய்ங்க.. சௌரவ் கங்குலி அறிவுரை

“அதே போல குல்தீப் யாதவ் சிறப்பாக கம்பேக் கொடுத்தார் என்று நினைக்கிறேன். அவர் தற்போது பெரிய அளவில் முன்னேறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருப்பதால் அவர் எந்த வகையிலும் குறைவாக செயல்படவில்லை. இந்த தொடரில் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவார்” என்று கூறினார்.

Advertisement