சர்பராஸ் கான் அதுக்கு செட்டாக மாட்டாரு.. வருவதை மட்டும் செய்ங்க.. சௌரவ் கங்குலி அறிவுரை

Sourav Ganguly 7
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் அறிமுகமானார். கடந்த சில வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்து போராடிய அவருக்கு சீனியர்கள் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இருப்பினும் தற்போதைய இங்கிலாந்து தொடரில் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விளையாடவில்லை. அதன் காரணமாக இத்தொடரின் 3வது போட்டியில் வாய்ப்பை பெற்ற அவர் 62, 68* ரன்கள் அடித்து அறிமுகப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

செட்டாக மாட்டார்:
குறிப்பாக தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையும் சமன் செய்தார். அதன் காரணமாக தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் வருங்காலங்களில் டி20 கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமான சர்பராஸ்கான் பெரிய அளவில் அசத்தவில்லை. அதன் பின் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளில் அவ்வப்போது விளையாடிய அவர் இதுவரை 50 ஐபிஎல் போட்டிகளில் 37 இன்னிங்ஸில் களமிறங்கி வெறும் 585 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சர்பராஸ் கான் இயற்கையாகவே 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் திறமையை கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். ஆனால் அவர் டி20 போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவர் 5 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கு அதிகமாக பொருந்தக்கூடியவர் என்று நினைக்கிறேன். அவருடைய ஆட்டம் அதற்குத் தான் பொருந்தும்”

இதையும் படிங்க: எந்த வீரரையும் பி.சி.சி.ஐ கட்டாயப்படுத்த முடியாது.. அது அவங்களோட தனிப்பட்ட முடிவு – விரிதிமான் சஹா கருத்து

“டி20 என்பது முற்றிலும் வித்தியாசமான ஃபார்மட். சர்பராஸ் கான் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் அடித்துள்ள ரன்கள் அபாரமானதாகும். எனவே அவர்கள் சொல்வது போல நீங்கள் ரன்கள் அடிக்காத இடத்திற்கு சென்று உங்களை வீணடிக்காதீர்கள். அது தான் சர்பராஸ் கான் விஷயத்தில் சரியாக நடந்துள்ளது” என்று கூறினார். அதாவது டி20 கிரிக்கெட்டில் அசத்தாத சர்பராஸ் கான் கடைசி வரை தமக்கு பொருந்தக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் தான் சாதித்துள்ளதாக கங்குலி கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement