எந்த வீரரையும் பி.சி.சி.ஐ கட்டாயப்படுத்த முடியாது.. அது அவங்களோட தனிப்பட்ட முடிவு – விரிதிமான் சஹா கருத்து

Saha
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று இந்த ஆண்டிற்கான இந்திய வீரர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்கள் பிரிக்கப்பட்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப சம்பளத்தையும் நிர்ணயித்திருந்தது. இந்த சம்பள பட்டியலில் இருந்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இருவரும் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருந்தும் ரஞ்சி கோப்பையில் விளையாடாதது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிசிசிஐ தேசிய அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் கண்டிப்பாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்களின் அந்த கோரிக்கையை மதிக்காமல் ஐபிஎல் தொடருக்காக தயாராகும் வகையில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வேண்டுமென்றே ரஞ்சி கோப்பை போட்டிகளை புறக்கணித்ததாக கருதிய பிசிசிஐ அவர்களை சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கி அதிரடி காட்டியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் அனுபவ வீரரான விருதிமான் சஹா கூறுகையில் :

இது பிசிசிஐ-யின் முடிவாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வீரர்களின் முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பிசிசிஐ கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. நான் எப்போதெல்லாம் பிட்டாக இருந்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் கிளப் போட்டிகள், ஆபீஸ் போட்டிகள் என அனைத்தையுமே பங்கேற்று விளையாடி உள்ளேன்.

- Advertisement -

நான் எப்பொழுதுமே ஒரு போட்டியை போட்டியாக தான் பார்க்கிறேன். அது எவ்வித போட்டியாக இருந்தாலும் எனக்கு சமமாக தான் தெரியும். சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், கிளப் போட்டிகள் என்று எதையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது. இப்படி அனைத்து வீரர்களுமே அனைத்து போட்டிகளையும் சமமான போட்டிகளாக பாவித்து விளையாடினால் அது அவர்களின் கரியருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் அது நல்லதாக அமையும்.

இதையும் படிங்க : 267/9 டூ 383 ரன்ஸ்.. டெயில் எண்டருடன் சேர்ந்து நியூஸிலாந்தை கடுப்பேற்றிய க்ரீன்.. 20 வருட புதிய சாதனை

சர்ஃபராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் கடந்த 4-5 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடியதால் தான் இந்திய அணியில் தற்போது இடம் பிடித்து விளையாடுகிறார். நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவர். அதேபோன்று துருவ் ஜுரேல் ஆட்டத்தை நான் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் பார்த்தது கிடையாது. தற்போது அவர் விளையாடி வரும் ஆட்டத்தை கூட நான் பார்க்கவில்லை. இருந்தாலும் அவர் ஒரு நல்ல வீரர் என்று தெரிகிறது. அதனால் தான் கடைசி போட்டியில் அவர் நமக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளார் என்று விரிதிமான் சஹா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement