267/9 டூ 383 ரன்ஸ்.. டெயில் எண்டருடன் சேர்ந்து நியூஸிலாந்தை கடுப்பேற்றிய க்ரீன்.. 20 வருட புதிய சாதனை

- Advertisement -

நியூசிலாந்து – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 29ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மிகவும் போராடி 383 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் 31, உஸ்மான் கவாஜா 33 ரன்களில் அவுட்டானார்கள். அந்த நிலையில் வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 1 ரன்னில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த டிராவிஸ் ஹெட் 1, மிட்சேல் மார்ஷ் 40, அலெக்ஸ் கேரி 10 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதே போல அடுத்ததாக வந்த ஸ்டார்க் 9, பட் கமின்ஸ் 16, நேதன் லயன் 5 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த கேமரூன் கிரீன் முதல் நாள் முடிவில் சதமடித்து 102* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கடுப்பேற்றிய சாதனை ஜோடி:
அப்போது ஆஸ்திரேலியா 269/9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் ஜோஸ் ஹேசல்வுட் 0* ரன்களில் இருந்தார். அந்த நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஹேசல்வுட் விக்கெட்டை விடக்கூடாது என்ற எண்ணத்துடன் மிகவும் மெதுவாக விளையாடினார். அதை பயன்படுத்திய கேமரூன் கிரீன் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து 150 ரன்கள் கடந்து ஆஸ்திரேலியாவை முழுமையாக காப்பாற்றினார்.

நேரம் செல்ல செல்ல நியூசிலாந்தை கடுப்பேற்றிய இந்த ஜோடியில் கேமரூன் கிரீன் கடைசி வரை அவுட்டாகாமல் 23 பவுண்டரி 5 சிக்சருடன் 174* ரன்கள் விளாசினார். அவருடன் 10வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் ஹேசல்வுட் 22 ரன்கள் குவித்து ஒரு வழியாக அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலிய ஜோடி என்ற 20 வருட சாதனையை உடைத்து கேமரூன் கிரீன் – ஜோஸ் ஹேசல்வுட் புதிய சாதனை படைத்தனர்.

- Advertisement -

இதற்கு முன் 2004ஆம் ஆண்டு காபாவில் ஜேசன் கில்லஸ்ப்பி – கிளன் மெக்ராத் 114 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 5, வில் எங் 9, கேன் வில்லியம்சன் 0, ரவீந்திரா 0, டார்ல் மிட்சேல் 11, டாம் பிளண்டல் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க: 12 வருடம் கழித்து வில்லியம்சனுக்கு நேர்ந்த சோகம்.. 383 ரன்ஸ்.. நியூஸிலாந்தை தெறிக்க விட்ட ஆஸி

அதனால் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 71 (70), மார்க் ஹென்றி 42 (34) ரன்கள் எடுத்தும் 179 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து பாலோ ஆன் பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் நைன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் ஃபாலோ ஆன் கொடுக்காமல் விளையாடும் ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 13/2 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை விட 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு ஸ்மித் 0, லபுஸ்ஷேன் 2 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டான நிலையில் களத்தில் உஸ்மான் கவாஜா 5*, நேதன் லயன் 6* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement