12 வருடம் கழித்து வில்லியம்சனுக்கு நேர்ந்த சோகம்.. 383 ரன்ஸ்.. நியூஸிலாந்தை தெறிக்க விட்ட ஆஸி

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. பிப்ரவரி 29ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் போராடி 383 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து கடைசி விக்கெட்டுக்கு ஜோஸ் ஹேசல்வுட்டுடன் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 23 பவுண்டரி 5 சிக்சருடன் 174* ரன்கள் குவித்தார். அவருடன் ஹேசல்வுட் 22 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா ஓரளவு தப்பிய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

12 வருடம் கழித்து:
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 5 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். இருப்பினும் மிட்சேல் ஸ்டார்க் வீசிய 5வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட அவர் சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்புறம் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் வில் எங் பந்தை பார்த்துக்கொண்டே சற்று தடுமாற்றத்துடன் சிங்கிள் எடுக்க ஓடினார்.

அதனால் தவறுதலாக கேன் வில்லியம்சன் மீது அவர் மோதினார். அப்போது தடுமாற்றமடைந்த கேன் வில்லியம்சன் ஒதுங்கி ஓடுவதற்கு முயற்சித்த போது அருகிலேயே நின்ற மிட்சேல் ஸ்டார்க் மீது மோதினார். அப்படி 2 வீரர்கள் மீது மோதி வெளியே வருவதற்குள் அவரை மார்னஸ் லபுஸ்ஷேன் டைரக்ட் ஹிட் முறையில் ரன் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் டக் அவுட்டான கேன் வில்லியம்சன் 12 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிதாபமாக ரன் அவுட்டாகி சென்றார். கடைசியாக ஜிம்பாப்பேவுக்கு எதிராக நேப்பியரில் நடந்த போட்டியில் ரன் அவுட்டான அவருக்கு மீண்டும் இப்படி ஒரு பரிதாபம் நேர்ந்தது நியூசிலாந்து ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் வில் எங் 0, ரச்சின் ரவீந்தரா 0, டார்ல் மிட்சேல் 11, டாம் பிளண்டல் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க: கடைசி பேட்ஸ்மேனை களத்தில் நிற்க வைத்து கதகளி ஆடிய கேமரூன் கிரீன் – உற்சாகத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள்

அதனால் க்ளென் பிலிப்ஸ் 71 (70), மாட் ஹென்றி 42 (34) ரன்கள் அதிரடியாக எடுத்தும் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி தெறிக்க விட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் 200 ரன்கள் கூட எடுக்காததால் இப்போட்டியில் நியூசிலாந்து பாலோ ஆன் பெற்றது. இருப்பினும் அந்த அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா 204 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement