கடைசி பேட்ஸ்மேனை களத்தில் நிற்க வைத்து கதகளி ஆடிய கேமரூன் கிரீன் – உற்சாகத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள்

Green
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டன் நகரில் பிப்ரவரி 29-ஆம் தேதி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்து அசத்தியது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 275 பந்துகளை சந்தித்து 23 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 174 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ்சில் விளையாடிய நியூசிலாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 179 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதனைத்தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி 204 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 267 ரன்களுக்கு எல்லாம் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் கடைசி வீரருடன் ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக கடைசி விக்கெட்க்கு மட்டும் ஜோஷ் ஹேசல்வுட்டுடன் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக முதல்நாள் ஆட்டநேர இறுதியில் சதம் அடித்து அசத்தியிருந்த அவர் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்திலும் தனது அதிரடி தொடர்ந்து இறுதிவரை 174 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த ஆட்டம் தற்போது ஆர்.சி.பி (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) அணி ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : 5 ஆவது டெஸ்ட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

ஏனெனில் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்பாகவே பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் ஐபிஎல் தொடரிலும் தொடரும் என்பதனால் கேமரூன் கிரீனின் இந்த சதத்தை ஆர்.சி.பி அணி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement