5 ஆவது டெஸ்ட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal-and-Kohli
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே பல்வேறு சாதனைகள் நிகழ்ந்து வரும் வேளையில் 22 வயதான இந்திய அணியின் அதிரடி இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலியின் மேலும் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்களுடன் நான்கு போட்டிகளில் விளையாடி 655 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் மற்றும் 732 ரன்கள் என இரண்டு முறை 700 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 692 ரன்களையும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 655 ரன்களையும் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 655 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் போது மேலும் அவர் 38 ரன்களை சேர்த்தால் விராட் கோலியின் 692 ரன்கள் என்கிற சாதனையை முறியடித்து கவாஸ்கருக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : நியாயமா பாத்தா அஷ்வினுக்கும் அந்த மரியாதையை குடுத்திருக்கனும்.. பி.சி.சி.ஐ செய்துள்ள பாகுபாடு

அதோடு அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் 46 ரன்களை குவிக்கும் பட்சத்தில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்து ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற அரிதான சாதனையையும் நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement