நியாயமா பாத்தா அஷ்வினுக்கும் அந்த மரியாதையை குடுத்திருக்கனும்.. பி.சி.சி.ஐ செய்துள்ள பாகுபாடு

Ashwin
- Advertisement -

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலில் நான்கு பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதை பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் அதிக சம்பளத்தை பெறும் வீரர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஏ+ பிரிவில் இடம் பிடித்திருக்கும் அவர்கள் நான்கு பேருமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதாலும், அனுபவ வீரர்களாக இருப்பதினால் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அவர்களுக்கு அடுத்து ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு என்று தனித்தனியே வீரர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில் தமிழக வீரரும், இந்திய அணியின் சீனியர் பிளேயருமான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த சம்பள பட்டியலில் ஏ பிரிவில் மட்டுமே 5 கோடி ரூபாய் சம்பளத்தில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அஸ்வினுக்கு உரிய மரியாதையை பிசிசிஐ வழங்காமல் பாகுபாடு காட்டிவிட்டதாகவும் ரசிகர்கள் ஒருபுறம் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் அஸ்வின் தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுக்கு இணையாக பந்துவீச்சில் ஜாம்பவான் அந்தஸ்தை ஏற்கனவே பெற்றுவிட்டார்.

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருவதால் இந்த பாகுபாடு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலககோப்பை அதற்கு முன்னர் நடைபெற்ற டி20 உலக கோப்பை என அனைத்து தொடர்களிலுமே அவர் இடம்பிடித்து விளையாடி இருந்தார்.

- Advertisement -

இப்படி இருக்கும் வேளையில் அனுபவ வீரரான அஸ்வினை மட்டும் ஏன் ஏ+ ப்ளஸ் பிரிவில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதோடு அஸ்வின் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலா நகரில் நடைபெறவுள்ள போட்டியுடன் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளை பூர்த்தி செய்ய காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் – காரணம் என்ன தெரியுமா?

இப்படி இருக்கும் வேளையில் அவருக்கு உண்டான மரியாதையாக அவருக்கு ஏ+ ப்ளஸ் பிரிவு சம்பள ஒப்பந்தத்தினை வழங்கி இருக்கலாம் என்னதான் இந்திய அணி அவரை இடையிடையே நிராகரித்து வந்தாலும் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடுவதை மட்டுமே அஸ்வின் குறிக்கோளாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement