5 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் – காரணம் என்ன தெரியுமா?

Sundar
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ இருக்கும் வேளையில் கே.எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக காயம் காரணமாக கே.எல் ராகுல் வெளியேறிய வேளையில் வாஷிங்டன் சுந்தர் வெளியேறியதற்கு காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தமிழக அணியானது மும்பை அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் பங்கேற்பதனால் அந்த போட்டியில் விளையாடுவதற்காகவே வாஷிங்டன் சுந்தர் இந்த கடைசி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தாலும் இதுவரை பெஞ்சிலே அமர்ந்திருந்த வேளையில் தற்போது அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறி ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உடனே கம்பேர் பண்ணாதீங்க.. எல்லாரும் தோனியாக முடியாது.. அவர் 3 ஃபார்மட்லயும் அசதத்துவாரு.. பாராட்டிய கங்குலி

இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள், 19 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement