
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை நவம்பர் 30-ம் தேதி ராஞ்சி நகரில் துவங்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்று இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே ராஞ்சி நகருக்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரரான ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடியின் ஆல்டைம் சாதனையை ரோகித் சர்மா முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் ரோகித் சர்மா நிழத்தப்போகும் சாதனை யாதெனில் :
இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 268 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாக 349 சிக்ஸர்களை விளாசி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி 369 போட்டிகளில் விளையாடி 351 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார். அவரது இந்த சாதனையை தகர்க்க ரோஹித் சர்மாவுக்கு வெறும் 3 சிக்ஸர்கள் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் இந்த போட்டியிலேயே அவர் முறியடிப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கப்போகும் வீரர் யார்? கெய்க்வாட்டா? ஜெய்ஸ்வாலா? – விவரம் இதோ
அப்படி முதல் போட்டியில் அவரால் 3 சிக்ஸர்களை அடிக்க முடியவில்லை என்றாலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நிச்சயம் அவரது இந்த சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.