ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கப்போகும் வீரர் யார்? கெய்க்வாட்டா? ஜெய்ஸ்வாலா? – விவரம் இதோ

Jaiswal and Ruturaj
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்க இருக்கிறது. அதன் காரணமாக தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

துவக்க வீரராக களமிறங்கப்போவது யார்? :

அதன் காரணமாக ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கப்போகும் வீரர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் துவக்க வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே ரோஹித் சர்மாவுடன் விளையாட முடியும்.

- Advertisement -

அப்படி ரோஹித் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர துவக்க வீரராக விளையாடி வந்தாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

அதேவேளையில் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதோடு சேர்த்து கடந்த 2 ஆண்டுகளாக தனது வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அதனால் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்க அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடியிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மட்டுமின்றி ரஞ்சி போட்டியிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இதன்காரணமாக அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் இளம் வீரர் என்பதால் அவர் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பினை பெற சிறிது ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டாலும் தவறில்லை என்பதாலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement